• May 13 2025

பொலிசார் மக்களின் மனதை வெல்ல வேண்டும், இல்லையேல் போதையை ஒழிக்க முடியாது! ஜனாதிபதி அனுர

Chithra / Feb 1st 2025, 7:34 am
image

பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு இல்லாவிட்டால் போதை பொருளை ஒழிக்க முடியாது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

நேற்று  யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தைதலைமை தாங்கி நடத்திய நிலையில் போதை ஒழிப்பு தொடர்பான விடயதானங்களில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் 

வடக்கில் தமிழ் இளைஞர் யுவாதிகள் பொலிசில் இணைந்து கொள்வது மிகக் குறைவு. சட்டவிரோத போதை பொருள் பாவனயை கட்டுப்படுத்த வேண்டுமானால் பொலிசார் பொதுமக்களின் மனதை வெல்ல வேண்டும்.

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் பொலிசாரிடம் முறையிடும்போது முறையிடுவோர் தொடர்பான தகவல்கள் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு செல்கிறது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சுனில்ஹந்துநெந்தி வவுனியாவில் ஒரு கிராமத்துக்கு சென்றேன் அங்கு பொலிசாரை மக்கள் திட்டி தீர்த்தார்கள்.

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பொலிசார் உடந்தையாக இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள் இவ்வாறு மக்கள் மத்தியில் பொலிசார் தொடர்பில் மாற்றுக் கருத்து பரவலாக உள்ளது என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த வட பிராந்திய பொலிஸ்மா அதிபர் தனபால சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் அடிப்படையில் பல கைது நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது. 

கீழ்நிலை அதிகாரிகள் தவறவிட்டால் உயர் அதிகாரிகளிடம் முறையிடங்கள் அல்லது பொலிஸ் விசேட தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தியே தகவல்களை கூற முடியும் முறைப்பாட்டாளர் தன்னை  அடையாளப்படுத்த வேண்டிய தேவை இல்லை தகவல்களை துல்லியமாக வழங்கினால் நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார் 

பொலிசார் மக்களின் மனதை வெல்ல வேண்டும், இல்லையேல் போதையை ஒழிக்க முடியாது ஜனாதிபதி அனுர பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு இல்லாவிட்டால் போதை பொருளை ஒழிக்க முடியாது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்று  யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தைதலைமை தாங்கி நடத்திய நிலையில் போதை ஒழிப்பு தொடர்பான விடயதானங்களில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கில் தமிழ் இளைஞர் யுவாதிகள் பொலிசில் இணைந்து கொள்வது மிகக் குறைவு. சட்டவிரோத போதை பொருள் பாவனயை கட்டுப்படுத்த வேண்டுமானால் பொலிசார் பொதுமக்களின் மனதை வெல்ல வேண்டும்.இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் பொலிசாரிடம் முறையிடும்போது முறையிடுவோர் தொடர்பான தகவல்கள் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு செல்கிறது என்றார்.இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சுனில்ஹந்துநெந்தி வவுனியாவில் ஒரு கிராமத்துக்கு சென்றேன் அங்கு பொலிசாரை மக்கள் திட்டி தீர்த்தார்கள்.சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பொலிசார் உடந்தையாக இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள் இவ்வாறு மக்கள் மத்தியில் பொலிசார் தொடர்பில் மாற்றுக் கருத்து பரவலாக உள்ளது என தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த வட பிராந்திய பொலிஸ்மா அதிபர் தனபால சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் அடிப்படையில் பல கைது நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது. கீழ்நிலை அதிகாரிகள் தவறவிட்டால் உயர் அதிகாரிகளிடம் முறையிடங்கள் அல்லது பொலிஸ் விசேட தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தியே தகவல்களை கூற முடியும் முறைப்பாட்டாளர் தன்னை  அடையாளப்படுத்த வேண்டிய தேவை இல்லை தகவல்களை துல்லியமாக வழங்கினால் நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார் 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now