• May 03 2025

வாக்காளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திய வாக்களிப்பு நிலையம்!

Tamil nila / Sep 21st 2024, 2:07 pm
image

நுவரெலியா - மஸ்கலியா தேர்தல் தொகுதியில் நோர்வுட் நியுவெளி இலக்கம் 205 வாக்களிப்பு   நிலையமானது வாக்காளர்களுக்கு பல விதங்களிலும் அசெளகரியத்தை ஏற்படுத்திய ஒன்றாக விளங்கியுள்ளது. நியுவெளி தோட்டத்தின் பழைய தேயிலை தொழிற்சாலையே இப்பகுதியின் வாக்களிப்பு நிலையமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.


தொழிற்சாலையின் மேற்பகுதியில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் இரும்பிலான படிக்கற்களில் வாக்காளர்கள் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட்டதையும், வயதான வாக்காளர்கள் சிலர் இப்படிக்கற்களில் ஏற முடியாமல் திரும்பிச் சென்றதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

மேலும் வாக்களிப்பு நிலையத்தின் உட்புறம் மிக குறுகியதாக இருப்பதால் தாம் பணிகளை மேற்கொள்ள சிரமங்களை எதிர் கொண்டதாக  மேற்படி வாக்களிப்பு நிலைய சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் உட்பட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்ட பொலிஸாரும் தெரிவித்தனர்.


வாக்காளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திய வாக்களிப்பு நிலையம் நுவரெலியா - மஸ்கலியா தேர்தல் தொகுதியில் நோர்வுட் நியுவெளி இலக்கம் 205 வாக்களிப்பு   நிலையமானது வாக்காளர்களுக்கு பல விதங்களிலும் அசெளகரியத்தை ஏற்படுத்திய ஒன்றாக விளங்கியுள்ளது. நியுவெளி தோட்டத்தின் பழைய தேயிலை தொழிற்சாலையே இப்பகுதியின் வாக்களிப்பு நிலையமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.தொழிற்சாலையின் மேற்பகுதியில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் இரும்பிலான படிக்கற்களில் வாக்காளர்கள் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட்டதையும், வயதான வாக்காளர்கள் சிலர் இப்படிக்கற்களில் ஏற முடியாமல் திரும்பிச் சென்றதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.மேலும் வாக்களிப்பு நிலையத்தின் உட்புறம் மிக குறுகியதாக இருப்பதால் தாம் பணிகளை மேற்கொள்ள சிரமங்களை எதிர் கொண்டதாக  மேற்படி வாக்களிப்பு நிலைய சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் உட்பட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்ட பொலிஸாரும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now