• May 04 2024

இராணுவத்தின் உச்சக்கட்ட பிடியில் தமிழர் தாயகம்! பிரித்தானிய எம்பிக்களுக்கு விளக்கமளித்த ஈழத்துச் சட்டத்தரணி samugammedia

Chithra / Jun 15th 2023, 11:07 am
image

Advertisement

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினரின் நிலைப்பாடு உச்ச மட்டத்திலே காணப்படுவதாக சட்டத்தரணி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான வீ.எஸ்.எஸ்.தனஞ்சயன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தடுத்து நிறுத்தக் கோரி பிரித்தானியாவில் நேற்று (14) இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

போர் நிறைவுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆன போதிலும் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் நிலை உயர்மட்டத்திலேயே காணப்படுகின்றது.

குறிப்பாக அடையாளம் நிறுவனத்தின் அறிக்கையின்படி இரு பொதுமகனுக்கு ஒரு இராணுவவீரர் என்ற நிலையில் முல்லைத்தீவில்  இராணுவமயமாக்கல் அதிகரித்த நிலையிலேயே இருக்கின்றது.

அதேவேளை இராணுவத்தினர் தனியார் காணிகளை அபகரிப்பது மட்டுமல்லாது அவர்களே விவசாயங்களை அக்காணிகளில் செய்கின்றனர்.

இதனால் வடக்கு கிழக்கில் மக்கள் பொருளாதாரமும் பாரிய நெருக்குதலுக்கு உள்ளாகுகின்றனர்.

அதேவேளை குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலான வழக்கினை முன்னெடுப்பவர் என்ற வகையில் அங்கு மேலதிகமாக எந்தவித கட்டுமாண பணிகளையும் செய்யக்கூடாது என முல்லைத்தீவு நீதிமன்றினால் 3 தடவைகள் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அதனையும் மீறி இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் அங்கு பௌத்த விகாரை கட்டுமானப்பணிகள் இடம்பெற்று நிறைவுறும் நிலையை எட்டியுள்ளது.

அத்துடன் வடக்கு கிழக்கில் இயங்கும் அரச நிறுவனங்களும் ஒரு தலைப்பட்சமாக இயங்குகின்றது.

குறிப்பாக தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரசபை தன்னிச்சையாக அரசுக்கு சார்பாகவே வடக்கு கிழக்கில் இயங்குவதாகவும் அவர்களே காணிகளை அபகரிப்பதற்கு முன்னிற்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


இராணுவத்தின் உச்சக்கட்ட பிடியில் தமிழர் தாயகம் பிரித்தானிய எம்பிக்களுக்கு விளக்கமளித்த ஈழத்துச் சட்டத்தரணி samugammedia வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினரின் நிலைப்பாடு உச்ச மட்டத்திலே காணப்படுவதாக சட்டத்தரணி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான வீ.எஸ்.எஸ்.தனஞ்சயன் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தடுத்து நிறுத்தக் கோரி பிரித்தானியாவில் நேற்று (14) இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,  போர் நிறைவுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆன போதிலும் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் நிலை உயர்மட்டத்திலேயே காணப்படுகின்றது.குறிப்பாக அடையாளம் நிறுவனத்தின் அறிக்கையின்படி இரு பொதுமகனுக்கு ஒரு இராணுவவீரர் என்ற நிலையில் முல்லைத்தீவில்  இராணுவமயமாக்கல் அதிகரித்த நிலையிலேயே இருக்கின்றது.அதேவேளை இராணுவத்தினர் தனியார் காணிகளை அபகரிப்பது மட்டுமல்லாது அவர்களே விவசாயங்களை அக்காணிகளில் செய்கின்றனர்.இதனால் வடக்கு கிழக்கில் மக்கள் பொருளாதாரமும் பாரிய நெருக்குதலுக்கு உள்ளாகுகின்றனர்.அதேவேளை குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலான வழக்கினை முன்னெடுப்பவர் என்ற வகையில் அங்கு மேலதிகமாக எந்தவித கட்டுமாண பணிகளையும் செய்யக்கூடாது என முல்லைத்தீவு நீதிமன்றினால் 3 தடவைகள் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் அதனையும் மீறி இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் அங்கு பௌத்த விகாரை கட்டுமானப்பணிகள் இடம்பெற்று நிறைவுறும் நிலையை எட்டியுள்ளது.அத்துடன் வடக்கு கிழக்கில் இயங்கும் அரச நிறுவனங்களும் ஒரு தலைப்பட்சமாக இயங்குகின்றது.குறிப்பாக தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரசபை தன்னிச்சையாக அரசுக்கு சார்பாகவே வடக்கு கிழக்கில் இயங்குவதாகவும் அவர்களே காணிகளை அபகரிப்பதற்கு முன்னிற்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement