• Apr 20 2024

கடற்றொழிலாளர் சமூகத்தை சந்திக்க பின்னடிக்கும் ஜனாதிபதி..! அன்னராசா ஆதங்கம்..!samugammedia

Sharmi / Jun 1st 2023, 5:02 pm
image

Advertisement

ஜனாதிபதியை சந்திப்பதற்காக மூன்று தடவை மகஜர் அனுப்பியும் எந்தவித அழைப்பும்  இதுவரை இல்லை என வடமாகாண கடற்றொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதி  அன்னலிங்கம் அன்ராசா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஆறு மாதங்களுக்குள் மூன்று தடவைகள் எம்மால் மூன்று மகஜர்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதில் முதலாவது மகஜர்  யாழ்ப்பாண விகாராதிபதி ஊடாக அனுப்பியிருந்தோம்.

அதனை தொடர்ந்து வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஊடாக மகஜரை  அனுப்பியிருந்தோம், அதற்கும்  எந்த விதமான அழைப்பு ஜனாதிபதியிடமிருந்து  சந்திப்பதற்கான அழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை.


நாங்கள் வட மாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்கள் ஒன்றிணைந்து எங்களுடைய வடமாகாண மீனவர்களுடைய பிரச்சனைகளை முன்வைத்து வருகிறோம். 
பிரச்சனைகளை தெளிவுபடுத்தி வருவதோடு எங்களுடைய கோரிக்கைகளையும் முன்வைத்து வருகிறோம்.

அந்த வகையிலே பருத்தித்துறை பிரதேசத்திலேயே வடமராட்சி  வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் தொடர்பாக எங்களுடைய ஜனாதிபதி அவர்களுக்கு  மூன்றாவது மகஜராக நாங்கள் பருத்தித் துறையை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு 2023 ஆம் ஆண்டு நாலாம் மாதம் பருத்தித்துறை பிரதேச செயலர் ஊடாகவும் மகஜர்  அனுப்பியிருந்தோம். அதற்கும் இதுவரை எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.

வடக்கு கடற்றொழில் சமூகம் மிகப் பெரும் ஆபத்துகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருவதாக அதில் அனுப்பி இருந்தோம். ஆனால் இதுவரை எவற்றிற்கும் ஜனாதிபதி பதிலளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர் சமூகத்தை சந்திக்க பின்னடிக்கும் ஜனாதிபதி. அன்னராசா ஆதங்கம்.samugammedia ஜனாதிபதியை சந்திப்பதற்காக மூன்று தடவை மகஜர் அனுப்பியும் எந்தவித அழைப்பும்  இதுவரை இல்லை என வடமாகாண கடற்றொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதி  அன்னலிங்கம் அன்ராசா தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த ஆறு மாதங்களுக்குள் மூன்று தடவைகள் எம்மால் மூன்று மகஜர்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதில் முதலாவது மகஜர்  யாழ்ப்பாண விகாராதிபதி ஊடாக அனுப்பியிருந்தோம்.அதனை தொடர்ந்து வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஊடாக மகஜரை  அனுப்பியிருந்தோம், அதற்கும்  எந்த விதமான அழைப்பு ஜனாதிபதியிடமிருந்து  சந்திப்பதற்கான அழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை.நாங்கள் வட மாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்கள் ஒன்றிணைந்து எங்களுடைய வடமாகாண மீனவர்களுடைய பிரச்சனைகளை முன்வைத்து வருகிறோம். பிரச்சனைகளை தெளிவுபடுத்தி வருவதோடு எங்களுடைய கோரிக்கைகளையும் முன்வைத்து வருகிறோம்.அந்த வகையிலே பருத்தித்துறை பிரதேசத்திலேயே வடமராட்சி  வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் தொடர்பாக எங்களுடைய ஜனாதிபதி அவர்களுக்கு  மூன்றாவது மகஜராக நாங்கள் பருத்தித் துறையை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு 2023 ஆம் ஆண்டு நாலாம் மாதம் பருத்தித்துறை பிரதேச செயலர் ஊடாகவும் மகஜர்  அனுப்பியிருந்தோம். அதற்கும் இதுவரை எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.வடக்கு கடற்றொழில் சமூகம் மிகப் பெரும் ஆபத்துகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருவதாக அதில் அனுப்பி இருந்தோம். ஆனால் இதுவரை எவற்றிற்கும் ஜனாதிபதி பதிலளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement