• Nov 25 2024

தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி அறிவிப்பு...!

Sharmi / Feb 20th 2024, 9:31 am
image

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் பாரத் – லங்கா' வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நிகழ்நிலை மூலம் நேற்றையதினம்(19)  அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான  பேச்சுக்களை முன்னெடுத்து  வருகின்றோம்.

அதன்பின்னர், மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும். இந்தப்பிரச்சினைகளைத் தீர்த்து,  இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி. முன்னோக்கிப் பயணிக்கவேண்டும். இந்தப் பயணத்துக்கு நாம் தயாராகவேண்டும்.

பொருளாதாரத்தை மேம்படுத்தி முன்னோக்கிச் செல்லும் போதும் பிரச்சினைகள் இருக்கின்றன. 

வரி அதிகரிக்கப்பட்ட பிரச்சினை இருக்கிறது. இந்தப் பிரச்சினை நீண்ட காலத்துக்கு இருக்காது. சிறிது காலம் செல்லும்போது வரிச் சுமை குறையும். இந்தியாவால் வழங்கப்பட்ட உதவிகளின் மூலம் இந்தக் காலத்தில் முன்னோக்கிப் பயணிக்க முடிந்தது. 

இந்த உதவிகள் கிடைத்திருக்காவிட்டால், எம்மால் முன்னோக்கிப் பயணித்திருக்க முடியாது. நாம் இந்தியாவுடன் இருக்கும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள பணியாற்றி வரு கிறோம். 

அனைத்து நாடுகளும் தமது எல்லைகளுக்குள் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் மேம்படுத்திக் கொள்ளவே முயற்சித்தன. இந்த நிலை மாறியுள்ளது. விசேடமாக இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் சந்தர்ப்பத்தில், நாமும் இதிலிருந்து பயன்பெறவேண்டும் எனவும் தெரிவித்தார்.


தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி அறிவிப்பு. நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் பாரத் – லங்கா' வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நிகழ்நிலை மூலம் நேற்றையதினம்(19)  அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான  பேச்சுக்களை முன்னெடுத்து  வருகின்றோம்.அதன்பின்னர், மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும். இந்தப்பிரச்சினைகளைத் தீர்த்து,  இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி. முன்னோக்கிப் பயணிக்கவேண்டும். இந்தப் பயணத்துக்கு நாம் தயாராகவேண்டும்.பொருளாதாரத்தை மேம்படுத்தி முன்னோக்கிச் செல்லும் போதும் பிரச்சினைகள் இருக்கின்றன. வரி அதிகரிக்கப்பட்ட பிரச்சினை இருக்கிறது. இந்தப் பிரச்சினை நீண்ட காலத்துக்கு இருக்காது. சிறிது காலம் செல்லும்போது வரிச் சுமை குறையும். இந்தியாவால் வழங்கப்பட்ட உதவிகளின் மூலம் இந்தக் காலத்தில் முன்னோக்கிப் பயணிக்க முடிந்தது. இந்த உதவிகள் கிடைத்திருக்காவிட்டால், எம்மால் முன்னோக்கிப் பயணித்திருக்க முடியாது. நாம் இந்தியாவுடன் இருக்கும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள பணியாற்றி வரு கிறோம். அனைத்து நாடுகளும் தமது எல்லைகளுக்குள் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் மேம்படுத்திக் கொள்ளவே முயற்சித்தன. இந்த நிலை மாறியுள்ளது. விசேடமாக இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் சந்தர்ப்பத்தில், நாமும் இதிலிருந்து பயன்பெறவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement