• Sep 23 2024

குறைகிறது விலை! - இலங்கை விவசாயிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 12th 2023, 11:00 am
image

Advertisement

யூரியா உரத்தின் விலை இவ்வருடம் மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உயர் பருவத்தில் 10,000 ரூபாவிற்கு வழங்கப்பட்டு வந்த யூரியா உர மூட்டை ஒன்றின் விலை 7,500 – 9,000 ரூபா வரை குறைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சீன அரசாங்கத்தினால் இந்நாட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருளை வெளியிடும் நிகழ்வை அவதானித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அகுனகொலபலஸ்ஸ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெறுவதற்காக திரண்டிருந்த விவசாயிகளை அமைச்சர் சந்தித்து அவர்களின் விவசாய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

ஒரு ஹெக்டேருக்கு 55 கிலோ TSP அல்லது மண் உரம் வழங்க வேளாண்மை துறை பரிந்துரைத்துள்ளதாகவும், அதே அளவு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


அத்துடன் பண்டி உரத்தின் விலை உயர்மட்டத்தில் உள்ளதால், அந்த உரத்தின் விலையை 10,000 ரூபாவாக குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

குறைகிறது விலை - இலங்கை விவசாயிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு SamugamMedia யூரியா உரத்தின் விலை இவ்வருடம் மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.உயர் பருவத்தில் 10,000 ரூபாவிற்கு வழங்கப்பட்டு வந்த யூரியா உர மூட்டை ஒன்றின் விலை 7,500 – 9,000 ரூபா வரை குறைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.சீன அரசாங்கத்தினால் இந்நாட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருளை வெளியிடும் நிகழ்வை அவதானித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அகுனகொலபலஸ்ஸ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெறுவதற்காக திரண்டிருந்த விவசாயிகளை அமைச்சர் சந்தித்து அவர்களின் விவசாய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.ஒரு ஹெக்டேருக்கு 55 கிலோ TSP அல்லது மண் உரம் வழங்க வேளாண்மை துறை பரிந்துரைத்துள்ளதாகவும், அதே அளவு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.அத்துடன் பண்டி உரத்தின் விலை உயர்மட்டத்தில் உள்ளதால், அந்த உரத்தின் விலையை 10,000 ரூபாவாக குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement