• Nov 21 2024

யாழில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு

Sharmi / Aug 5th 2024, 12:32 pm
image

யாழ் மாவட்டத்திலுள்ள மரக்கறி சந்தைகளில் கடந்த சில வாரங்களாக மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை உள்ளிட்ட விரத நாள்கள் மற்றும் ஆலயத் திருவிழாக்களையொட்டி அவற்றின் விலை எகிறியுள்ளதுடன் சில இடங்களில் பற்றாக்குறையும் நிலவுகிறது.

குறிப்பாக யாழ் திருநெல்வேலி சந்தையில் நேற்றைய மரக்கறி விலை நிலவரத்தின்படி,

கத்தரிக்காய் கிலோ 400 ரூபாவாகவும், பாகற்காய் கிலோ 1000 ரூபாவாகவும், பயிற்றங்காய் கிலோ 800 ரூபாவாகவும், பூசணிக்காய் கிலோ 250 ரூபாவாகவும், மரவள்ளி கிலோ 220 ரூபாவாகவும், வெண்டிக்காய் கிலோ 200 ரூபாவாகவும், கரட் 400 ரூபாவாகவும், பச்சைமிளகாய் 600 ரூபாவாகவும்,  கீரை ஒருபிடி 100 ரூபாவாகவும் தேசிக்காய் கிலோ 800 ரூபாவாகவும்  விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு யாழ் மாவட்டத்திலுள்ள மரக்கறி சந்தைகளில் கடந்த சில வாரங்களாக மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஆடி அமாவாசை உள்ளிட்ட விரத நாள்கள் மற்றும் ஆலயத் திருவிழாக்களையொட்டி அவற்றின் விலை எகிறியுள்ளதுடன் சில இடங்களில் பற்றாக்குறையும் நிலவுகிறது.குறிப்பாக யாழ் திருநெல்வேலி சந்தையில் நேற்றைய மரக்கறி விலை நிலவரத்தின்படி,கத்தரிக்காய் கிலோ 400 ரூபாவாகவும், பாகற்காய் கிலோ 1000 ரூபாவாகவும், பயிற்றங்காய் கிலோ 800 ரூபாவாகவும், பூசணிக்காய் கிலோ 250 ரூபாவாகவும், மரவள்ளி கிலோ 220 ரூபாவாகவும், வெண்டிக்காய் கிலோ 200 ரூபாவாகவும், கரட் 400 ரூபாவாகவும், பச்சைமிளகாய் 600 ரூபாவாகவும்,  கீரை ஒருபிடி 100 ரூபாவாகவும் தேசிக்காய் கிலோ 800 ரூபாவாகவும்  விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement