• May 02 2024

எங்கள் அனைவரையும் சுட்டுத்தள்ளிய ஆட்சியாளர்களைத் துரத்தவேண்டும் - ஜே.வி.பி வேட்பாளர் ஆவேசம்!

Sharmi / Jan 21st 2023, 1:11 pm
image

Advertisement

துவக்கைப் பாவித்து எங்கள் அனைவரையும் சுட்டுத்தள்ளிய ஆட்சியாளர்களைத் துரத்தவேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட முதன்மை வேட்பாளர் இளையதம்பி கணேசபிள்ளை தெரிவித்துள்ளார்.

கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தேசிய மக்கள் சக்தி (JVP), கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலகத்தில் இன்று கையளித்தது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் முதன்மை வேட்பாளர் இளையதம்பி கணேசபிள்ளை இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவித்த அவர்,

"ஆண்ட கட்சிகள் எல்லாமே துவக்கைப் பாவித்து எம்மைத் தாக்கியவர்கள். எனவே இந்த அரசாங்கத்தை துரத்த வேண்டும். இவர்களை நம்ப முடியாது.

ஆகவே அதற்கான முயற்சியாக நாம் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையிலும் போட்டியிடுகின்றோம்.

தென்னலங்கையில் இடம்பெறும் போராட்டங்கள் அனைத்தையும் தேசிய மக்கள் சக்தியே செய்து வருகிறது.  உரிமை கோர முடியாது. இப்போராட்டங்கள் அனைத்தையும் வெற்றிகொண்டு, ஆண்ட மற்றும் ஆளுகின்ற அரசாங்கங்கள் எல்லோரையும் சிறைக்குத் தள்ளி, ஓர் நீதியான நியாயமான அடிமையிலாத சூழ்நிலையில் எல்லோரும் வாழக்கூடிய உருவாக்குவோம்." எனத் தெரிவித்தார். 

எங்கள் அனைவரையும் சுட்டுத்தள்ளிய ஆட்சியாளர்களைத் துரத்தவேண்டும் - ஜே.வி.பி வேட்பாளர் ஆவேசம் துவக்கைப் பாவித்து எங்கள் அனைவரையும் சுட்டுத்தள்ளிய ஆட்சியாளர்களைத் துரத்தவேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட முதன்மை வேட்பாளர் இளையதம்பி கணேசபிள்ளை தெரிவித்துள்ளார்.கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தேசிய மக்கள் சக்தி (JVP), கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலகத்தில் இன்று கையளித்தது.இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் முதன்மை வேட்பாளர் இளையதம்பி கணேசபிள்ளை இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், "ஆண்ட கட்சிகள் எல்லாமே துவக்கைப் பாவித்து எம்மைத் தாக்கியவர்கள். எனவே இந்த அரசாங்கத்தை துரத்த வேண்டும். இவர்களை நம்ப முடியாது.ஆகவே அதற்கான முயற்சியாக நாம் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையிலும் போட்டியிடுகின்றோம்.தென்னலங்கையில் இடம்பெறும் போராட்டங்கள் அனைத்தையும் தேசிய மக்கள் சக்தியே செய்து வருகிறது.  உரிமை கோர முடியாது. இப்போராட்டங்கள் அனைத்தையும் வெற்றிகொண்டு, ஆண்ட மற்றும் ஆளுகின்ற அரசாங்கங்கள் எல்லோரையும் சிறைக்குத் தள்ளி, ஓர் நீதியான நியாயமான அடிமையிலாத சூழ்நிலையில் எல்லோரும் வாழக்கூடிய உருவாக்குவோம்." எனத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement