ஆயுதமேந்தி போராடுவது மட்டும் போராட்டம் அல்ல எனவும் போராடும் போது செயல்திறனும் செயல்நுட்பமும் எமக்கு அவசியம் எனவும் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்றையதினம் இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மே தினப் போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள் ஆகியன வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு பெரும் உண்மையை உணர்த்தி நிற்கின்றன.
அதாவது, போராட்ட மனோ நிலையை நாங்கள் கைவிட்டோமானால் இழந்த உரிமைகளை நாம் திரும்பவும் பெறமுடியாது என்பதே அது.
ஆயுத மேந்தி போராடுவது மட்டும் போராட்டம் என்று நாம் நினைக்கக்கூடாது. போராடும் போது செயல்திறனும் செயல்நுட்பமும் எமக்கு அவசியம். அவ்வாறான ஒரு மனநிலையில்தான் இன்று ஒரு தமிழ் பேசும் பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்கவேண்டும் என்று கூறிவருகின்றோம்.
பொதுவேட்பாளர் தேர்தலில் நாம் தேர்தலில் வெல்ல போட்டியிடவில்லை.பின் எதற்காக என்று கேட்டால் எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றை யோருக்கு தெளிவுபடுத்தவும் மக்கள்
தீர்ப்பு ஒன்றை வட, கிழக்கு மாகாணங்களில் பெற ஆவன செய்யவுமேதான் இந்த ஏற்பாட்டை வலியுறுத்துகின்றோம்.
ஒற்றையாட்சியானது இந்த நாட்டை சிங்கள மக்களுக்காக, சிங்கள மக்களால் பெரும்பான்மை சிங்கள மக்களின் நலன் பேணி நடத்தப்படும் ஓர் ஆட்சியாகும்.
எவர் ஆட்சிக்கு வந்தாலும் நடக்கப்போவது சிங்கள இனவழி ஆட்சியே. எமக்கு சுயநிர்ணய அதிகாரம் இருக்கின்றது என்று யார் சொன்னார்கள்?
இன்று இனவழியாட்சியே இங்கு நடந்து வருகின்றது. அதை மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றுவதாயின் நாம் ஒற்று மைப்பட வேண்டும். எமது குரல் ஐ. நா. வரையில் கேட்க வேண் டும். கேட்டதன் பின்னர் வட, கிழக்கில் மக்கள் தீர்மானத்துக்காக சர்வதேச நாடுகளால் இங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதை உலகுக்கு எடுத்துக்கூற ஒரு தமிழ் பொது வேட்பாளர் ஜனாதி பதித் தேர்தலில் பங்குபற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆயுதமேந்தி போராடுவது மட்டும் போராட்டம் அல்ல. எவர் ஆட்சிக்கு வந்தாலும் நடக்கப்போவது சிங்கள இனவழி ஆட்சியே. விக்னேஸ்வரன் எம்.பி தெரிவிப்பு. ஆயுதமேந்தி போராடுவது மட்டும் போராட்டம் அல்ல எனவும் போராடும் போது செயல்திறனும் செயல்நுட்பமும் எமக்கு அவசியம் எனவும் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.நேற்றையதினம் இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,மே தினப் போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள் ஆகியன வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு பெரும் உண்மையை உணர்த்தி நிற்கின்றன.அதாவது, போராட்ட மனோ நிலையை நாங்கள் கைவிட்டோமானால் இழந்த உரிமைகளை நாம் திரும்பவும் பெறமுடியாது என்பதே அது. ஆயுத மேந்தி போராடுவது மட்டும் போராட்டம் என்று நாம் நினைக்கக்கூடாது. போராடும் போது செயல்திறனும் செயல்நுட்பமும் எமக்கு அவசியம். அவ்வாறான ஒரு மனநிலையில்தான் இன்று ஒரு தமிழ் பேசும் பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்கவேண்டும் என்று கூறிவருகின்றோம்.பொதுவேட்பாளர் தேர்தலில் நாம் தேர்தலில் வெல்ல போட்டியிடவில்லை.பின் எதற்காக என்று கேட்டால் எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றை யோருக்கு தெளிவுபடுத்தவும் மக்கள்தீர்ப்பு ஒன்றை வட, கிழக்கு மாகாணங்களில் பெற ஆவன செய்யவுமேதான் இந்த ஏற்பாட்டை வலியுறுத்துகின்றோம்.ஒற்றையாட்சியானது இந்த நாட்டை சிங்கள மக்களுக்காக, சிங்கள மக்களால் பெரும்பான்மை சிங்கள மக்களின் நலன் பேணி நடத்தப்படும் ஓர் ஆட்சியாகும்.எவர் ஆட்சிக்கு வந்தாலும் நடக்கப்போவது சிங்கள இனவழி ஆட்சியே. எமக்கு சுயநிர்ணய அதிகாரம் இருக்கின்றது என்று யார் சொன்னார்கள்இன்று இனவழியாட்சியே இங்கு நடந்து வருகின்றது. அதை மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றுவதாயின் நாம் ஒற்று மைப்பட வேண்டும். எமது குரல் ஐ. நா. வரையில் கேட்க வேண் டும். கேட்டதன் பின்னர் வட, கிழக்கில் மக்கள் தீர்மானத்துக்காக சர்வதேச நாடுகளால் இங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதை உலகுக்கு எடுத்துக்கூற ஒரு தமிழ் பொது வேட்பாளர் ஜனாதி பதித் தேர்தலில் பங்குபற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.