• Aug 14 2025

ஆதனவரியை குறைக்க முடியாது என ஆளும் கட்சி விசேட அமர்விலும் தீர்மானம்! ஊடகங்களுக்கு மட்டுப்பாடு!

Chithra / Aug 14th 2025, 3:52 pm
image

  

வவுனியா மாநகர சபையின் ஆதனவரி அறவீட்டில் மக்களுக்கு வரி சுமையை குறைக்க கோரி எதிர்க்கட்சி கோரிக்கை முன்வைத்த போதிலும் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல்  8:10 என்ற அடிப்படையில் அறவிடுவதாக விசேட அமர்விலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வவுனியா மாநகரசபையின் ஆதனவரி தொடர்பான விசேட அமர்வு இன்று காலை இடம்பெற்றது. 

குழுநிலை விவாதத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆதனவரியை குறைக்க வேண்டும் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்தக்கூடாது என்றும் சிலவட்டாரங்களில் உள்ள மக்கள் இதனால் கடுமையாக பாதிப்படைவார்கள் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் மாநகரசபையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை மற்றும் ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றை சுட்டிக்காட்டி ஆதனவரியை  குடியிருப்புக்களுக்கு 8 வீதமாகவும், வர்த்தக நிலையங்களுக்கு 10 வீதமாகவும் அறவிடவேண்டிய தேவை இருப்பதாக ஆளும்தரப்பு உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து 8:10 என்ற அடிப்படையிலேயே ஆதனவரியை அறவிடுவதுடன் அடுத்தவருடம் அதில் மாற்றத்தை செய்யமுடியுமா என ஆராயலாம் என குழுநிலை விவாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழுநிலை விவாதம் இன்று இடம்பெற்ற நிலையில் அதனை செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 

இதனால் அந்த விவாதம் முடியும் வரை ஊடகவியலாளர்கள் வெளியில் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. குழு நிலை விவாதம் முடிவடைந்த பின்னர் ஊடகங்கள் செய்திசேகரிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.

இதேவேளை இனிவரும் காலங்களில் வவுனியா மாநகரசபையின் அமர்வில் கலந்துகொள்வதற்கு ஊடக அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட ஊடகங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படவேண்டும்  என சபை உறுப்பினர் பிரேமதாஸ் முன்மொழிந்திருந்தார்.  சக உறுப்பினர் பர்ஸ்சான் அதனை வழிமொழிந்தார். 

இதனையடுத்து இனிவரும் காலங்களில் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் அடையாள அட்டை அல்லது ஊடக அமைச்சின் அடையாள அட்டையை வைத்திருக்கும் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் சபை அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என சபை தீர்மானித்துள்ளது. 


ஆதனவரியை குறைக்க முடியாது என ஆளும் கட்சி விசேட அமர்விலும் தீர்மானம் ஊடகங்களுக்கு மட்டுப்பாடு   வவுனியா மாநகர சபையின் ஆதனவரி அறவீட்டில் மக்களுக்கு வரி சுமையை குறைக்க கோரி எதிர்க்கட்சி கோரிக்கை முன்வைத்த போதிலும் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல்  8:10 என்ற அடிப்படையில் அறவிடுவதாக விசேட அமர்விலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வவுனியா மாநகரசபையின் ஆதனவரி தொடர்பான விசேட அமர்வு இன்று காலை இடம்பெற்றது. குழுநிலை விவாதத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆதனவரியை குறைக்க வேண்டும் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்தக்கூடாது என்றும் சிலவட்டாரங்களில் உள்ள மக்கள் இதனால் கடுமையாக பாதிப்படைவார்கள் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.இருப்பினும் மாநகரசபையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை மற்றும் ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றை சுட்டிக்காட்டி ஆதனவரியை  குடியிருப்புக்களுக்கு 8 வீதமாகவும், வர்த்தக நிலையங்களுக்கு 10 வீதமாகவும் அறவிடவேண்டிய தேவை இருப்பதாக ஆளும்தரப்பு உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து 8:10 என்ற அடிப்படையிலேயே ஆதனவரியை அறவிடுவதுடன் அடுத்தவருடம் அதில் மாற்றத்தை செய்யமுடியுமா என ஆராயலாம் என குழுநிலை விவாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குழுநிலை விவாதம் இன்று இடம்பெற்ற நிலையில் அதனை செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த விவாதம் முடியும் வரை ஊடகவியலாளர்கள் வெளியில் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. குழு நிலை விவாதம் முடிவடைந்த பின்னர் ஊடகங்கள் செய்திசேகரிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.இதேவேளை இனிவரும் காலங்களில் வவுனியா மாநகரசபையின் அமர்வில் கலந்துகொள்வதற்கு ஊடக அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட ஊடகங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படவேண்டும்  என சபை உறுப்பினர் பிரேமதாஸ் முன்மொழிந்திருந்தார்.  சக உறுப்பினர் பர்ஸ்சான் அதனை வழிமொழிந்தார். இதனையடுத்து இனிவரும் காலங்களில் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் அடையாள அட்டை அல்லது ஊடக அமைச்சின் அடையாள அட்டையை வைத்திருக்கும் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் சபை அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என சபை தீர்மானித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement