• Mar 19 2025

ரணில் என்ற தனி மனிதரைக் கண்டு அஞ்சும் ஆளும் கட்சியினர்! கேள்வி எழுப்பிய தலதா அத்துகோரள

Chithra / Mar 19th 2025, 8:56 am
image

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்ற தனி மனிதரைக் கண்டு ஆளும் கட்சியினர் ஏன் இவ்வளவு அஞ்சுகின்றார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரள கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜே.வி.பி. கிளர்ச்சி காலத்தில் இடம்பெற்ற கொலைகளுக்கான உண்மையை வெளிச்சத்திற்கு வரும் வகையில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பட்டலந்த விவகாரம் குறித்து பேச வேண்டுமெனில் முதலில் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட வேண்டியது அமைச்சர் கே.டி. லால்காந்த எனக் குறிப்பிட்டுள்ளார்.

மதத் தலைவர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக அவர் தேர்தலுக்கு முன்பு வெளிப்படையாக கருத்து வெளியிட்டிருந்தார்

அமைச்சர் லால்காந்தவுக்கு எதிராக பெருமளவிலான சாட்சிகள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நாடாளுமன்றத்திலும், செயற்பாட்டு அரசியலிலும் இல்லை.

ஆனால் தனி நபரைக் கண்டு இவ்வளவு அச்சப்பட வேண்டிய நிலைமையில் ஆளும் தரப்பு உள்ளது என்றால், அதற்கு பின்னால் ஏதோ பரிதாபகரமான காரணங்கள் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

ரணில் என்ற தனி மனிதரைக் கண்டு அஞ்சும் ஆளும் கட்சியினர் கேள்வி எழுப்பிய தலதா அத்துகோரள  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்ற தனி மனிதரைக் கண்டு ஆளும் கட்சியினர் ஏன் இவ்வளவு அஞ்சுகின்றார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரள கேள்வி எழுப்பியுள்ளார்.நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,ஜே.வி.பி. கிளர்ச்சி காலத்தில் இடம்பெற்ற கொலைகளுக்கான உண்மையை வெளிச்சத்திற்கு வரும் வகையில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.பட்டலந்த விவகாரம் குறித்து பேச வேண்டுமெனில் முதலில் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட வேண்டியது அமைச்சர் கே.டி. லால்காந்த எனக் குறிப்பிட்டுள்ளார்.மதத் தலைவர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக அவர் தேர்தலுக்கு முன்பு வெளிப்படையாக கருத்து வெளியிட்டிருந்தார்அமைச்சர் லால்காந்தவுக்கு எதிராக பெருமளவிலான சாட்சிகள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நாடாளுமன்றத்திலும், செயற்பாட்டு அரசியலிலும் இல்லை.ஆனால் தனி நபரைக் கண்டு இவ்வளவு அச்சப்பட வேண்டிய நிலைமையில் ஆளும் தரப்பு உள்ளது என்றால், அதற்கு பின்னால் ஏதோ பரிதாபகரமான காரணங்கள் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement