• Apr 25 2025

மக்களை அச்சுறுத்தும் ஆளுந் தரப்பினர்:தேர்தல் ஆணைக்குழு பாராமுகம்- சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டம்..!

Sharmi / Apr 24th 2025, 2:45 pm
image

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிக்காதுவிட்டால் அந்த பிரதேச சபைக்கான ஒதுக்கீடுகள் எவையும் செய்யப்படாது என ஜனாதிபதி கூறிவருகின்றமையானது மக்களுக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுவதாக என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி தேர்தலாக இருந்தாலும் கூட ஆளும் தரப்பின் ஜனாதிபதி ,பிரதமர்  ஏனைய அமைச்சர்கள் வடக்கு கிழக்கிற்கு அடிக்கடி தமது விஜயத்தை மேற்கொண்டு வரும் அதேநேரம், ஒருவிதமான எச்சரிக்கையையும் தமிழ், மக்களுக்கு அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

முக்கியமான பிரச்சனையாக பேசப்படுவது  Npp எனப்படும் தேசிய மக்கள் சக்தி எந்த எந்த பிரதேசங்களில் வெற்றி பெறுகின்றதோ அந்தந்த பிரதேசங்களுக்கு மாத்திரம் தான்  நாங்கள் நிதியுதவி வழங்க முடியும் என்ற ஒரு  விடயத்தை பல்வேறு பட்ட இடங்களில் ஜனாதிபதி மீண்டும் மீண்டும் கூறி கொண்டே இருக்கின்றார்.

ஆனால் தற்போது நான் அப்பிடி சொல்லவில்லை வேறு விதமாக  சொன்னேன் என்கிறார். ஆனால் அவர் உண்மையாகவே மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே கூறியுள்ளார்.

அதாவது நீங்கள் எங்களுடைய தரப்பிற்கு  அல்லது எங்களுடைய கட்சிக்கு வாக்களிக்காமல் விட்டால் பிரதேச சபைக்கான ஒதுக்கீடுகள் எதுவும் வழங்கபடமாட்டாது என்ற எச்சரிக்கையையே வழுவாக சொல்லப்படுகின்றது.

இது உண்மையாகவே சட்டத்திற்கு முரணான ஒரு கருத்து.  இதற்கு  தேர்தல் ஆணையகம் எந்த விதமான விளக்கங்ககளும் கேட்கப்படவில்லை அது மட்டுமன்றி அது தொடர்பான எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை .

ஆகவே அவ்வாறான பிரச்சாரம் இடம்பெற்று கொண்டே இருக்கின்றது .ஆனால் உண்மையான விடயம் என்னவென்றால் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் மாகாண சபைகளுக்கு கீழே வரக்கூடியவை.

ஆகவே மாகாண சபைகளுக்கு ஊடாகத்தான் நிதி பங்கிடப்படும். ஆகவே மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டமே இது எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மக்களை அச்சுறுத்தும் ஆளுந் தரப்பினர்:தேர்தல் ஆணைக்குழு பாராமுகம்- சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டம். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிக்காதுவிட்டால் அந்த பிரதேச சபைக்கான ஒதுக்கீடுகள் எவையும் செய்யப்படாது என ஜனாதிபதி கூறிவருகின்றமையானது மக்களுக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுவதாக என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,உள்ளூராட்சி தேர்தலாக இருந்தாலும் கூட ஆளும் தரப்பின் ஜனாதிபதி ,பிரதமர்  ஏனைய அமைச்சர்கள் வடக்கு கிழக்கிற்கு அடிக்கடி தமது விஜயத்தை மேற்கொண்டு வரும் அதேநேரம், ஒருவிதமான எச்சரிக்கையையும் தமிழ், மக்களுக்கு அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.முக்கியமான பிரச்சனையாக பேசப்படுவது  Npp எனப்படும் தேசிய மக்கள் சக்தி எந்த எந்த பிரதேசங்களில் வெற்றி பெறுகின்றதோ அந்தந்த பிரதேசங்களுக்கு மாத்திரம் தான்  நாங்கள் நிதியுதவி வழங்க முடியும் என்ற ஒரு  விடயத்தை பல்வேறு பட்ட இடங்களில் ஜனாதிபதி மீண்டும் மீண்டும் கூறி கொண்டே இருக்கின்றார்.ஆனால் தற்போது நான் அப்பிடி சொல்லவில்லை வேறு விதமாக  சொன்னேன் என்கிறார். ஆனால் அவர் உண்மையாகவே மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே கூறியுள்ளார்.அதாவது நீங்கள் எங்களுடைய தரப்பிற்கு  அல்லது எங்களுடைய கட்சிக்கு வாக்களிக்காமல் விட்டால் பிரதேச சபைக்கான ஒதுக்கீடுகள் எதுவும் வழங்கபடமாட்டாது என்ற எச்சரிக்கையையே வழுவாக சொல்லப்படுகின்றது.இது உண்மையாகவே சட்டத்திற்கு முரணான ஒரு கருத்து.  இதற்கு  தேர்தல் ஆணையகம் எந்த விதமான விளக்கங்ககளும் கேட்கப்படவில்லை அது மட்டுமன்றி அது தொடர்பான எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை .ஆகவே அவ்வாறான பிரச்சாரம் இடம்பெற்று கொண்டே இருக்கின்றது .ஆனால் உண்மையான விடயம் என்னவென்றால் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் மாகாண சபைகளுக்கு கீழே வரக்கூடியவை. ஆகவே மாகாண சபைகளுக்கு ஊடாகத்தான் நிதி பங்கிடப்படும். ஆகவே மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டமே இது எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement