• May 04 2024

தவணைப் பரீட்சைகளும் ஒத்திவைப்பு! - கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 14th 2023, 3:45 pm
image

Advertisement

மேல்மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்படும் இறுதித் தவணைப் பரீட்சைக்காக நாளை (15) நடைபெறவிருந்த பாடங்கள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் அனைத்து கோட்டம் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார். 

இதன்படி, 9ஆம் தரத்தின் கணிதம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்கள் எதிர்வரும் 21ஆம் திகதியும், 10 மற்றும் 11ஆம் தரங்களின் இரண்டாம் பகுதிப் பாடங்கள் 22ஆம் திகதியும் நடைபெறும் என மாகாணக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

அரச, அரை அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை (15) அமுல்படுத்தவுள்ள ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நடாத்தப்படவிருந்த தவணைப் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் நாளை 15 ஆம் திகதி இடம்பெறவிருந்த 6 – 9 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் மார்ச் 17 ஆம் திகதி வரையிலும், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் மார்ச் 22 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் 22 ஆம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தவணைப் பரீட்சைகளும் ஒத்திவைப்பு - கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு SamugamMedia மேல்மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்படும் இறுதித் தவணைப் பரீட்சைக்காக நாளை (15) நடைபெறவிருந்த பாடங்கள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் அனைத்து கோட்டம் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார். இதன்படி, 9ஆம் தரத்தின் கணிதம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்கள் எதிர்வரும் 21ஆம் திகதியும், 10 மற்றும் 11ஆம் தரங்களின் இரண்டாம் பகுதிப் பாடங்கள் 22ஆம் திகதியும் நடைபெறும் என மாகாணக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். அரச, அரை அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை (15) அமுல்படுத்தவுள்ள ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நடாத்தப்படவிருந்த தவணைப் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.அந்த வகையில் நாளை 15 ஆம் திகதி இடம்பெறவிருந்த 6 – 9 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் மார்ச் 17 ஆம் திகதி வரையிலும், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் மார்ச் 22 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.இதேவேளை, சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் 22 ஆம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement