• May 21 2025

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

Chithra / May 21st 2025, 3:37 pm
image

 

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்து தொழிலாளர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று(21) நண்பகல் 12.00 மணி முதல் வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் கணினி தரவுத்தள அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட அவசர மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதால், சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று முதல் 23 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் ஊழியர் சேமலாப நிதியத்தின்(EPF ) சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்  ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்து தொழிலாளர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று(21) நண்பகல் 12.00 மணி முதல் வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டது.ஊழியர் சேமலாப நிதியத்தின் கணினி தரவுத்தள அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட அவசர மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதால், சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று முதல் 23 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் ஊழியர் சேமலாப நிதியத்தின்(EPF ) சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement