• Oct 01 2024

கே.எப்.சி சென்ற வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை

KFC
Chithra / Dec 20th 2023, 9:10 am
image

Advertisement



ராஜகிரியவில் உள்ள கே.எப்.சி (KFC) விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் பழுதடைந்த கோழி இறைச்சிகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என கே.எப்.சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

குறித்த சம்பவத்தால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.

தயாரிப்பு மற்றும் சேவை தரம் ஆகிய இரண்டிலும் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கு கே.எப்.சி உறுதியளித்தது.

இராஜகிரிய விற்பனை நிலையத்தில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களினால் அங்கிருந்த கோழி இறைச்சி கையிருப்பு அழிக்கப்பட்டது.

கோழி இறைச்சி பொதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து புகார் வந்ததையடுத்து குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


இதையடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விற்பனை நிலையத்திற்கு விரைந்து சென்று கெட்டுப்போனதாக நம்பப்படும் கோழி இறைச்சியை அப்புறப்படுத்தினர்.

எவ்வாறாயினும், மேலதிக விசாரணைகளுக்காக கோழி இறைச்சியின் மாதிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் முடிவு வெளியாவதற்கு 10 நாட்கள் செல்லலாம் எனவும் பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சமூக ஊடகங்களில் கேஎப்சி கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டது

கே.எப்.சி சென்ற வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி. சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை ராஜகிரியவில் உள்ள கே.எப்.சி (KFC) விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் பழுதடைந்த கோழி இறைச்சிகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என கே.எப்.சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.குறித்த சம்பவத்தால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.தயாரிப்பு மற்றும் சேவை தரம் ஆகிய இரண்டிலும் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கு கே.எப்.சி உறுதியளித்தது.இராஜகிரிய விற்பனை நிலையத்தில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களினால் அங்கிருந்த கோழி இறைச்சி கையிருப்பு அழிக்கப்பட்டது.கோழி இறைச்சி பொதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து புகார் வந்ததையடுத்து குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதையடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விற்பனை நிலையத்திற்கு விரைந்து சென்று கெட்டுப்போனதாக நம்பப்படும் கோழி இறைச்சியை அப்புறப்படுத்தினர்.எவ்வாறாயினும், மேலதிக விசாரணைகளுக்காக கோழி இறைச்சியின் மாதிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் முடிவு வெளியாவதற்கு 10 நாட்கள் செல்லலாம் எனவும் பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.இதனையடுத்து சமூக ஊடகங்களில் கேஎப்சி கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டது

Advertisement

Advertisement

Advertisement