• May 19 2024

இன்று ஆரம்பமாகும் நவராத்திரி விழாவின் சிறப்பும், மகத்துவமும்!! samugammedia

Tamil nila / Oct 15th 2023, 9:46 am
image

Advertisement

நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாள்கள் போரிட்டு 10ஆவது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நவராத்திரி விரதமானது ஒன்பது நாட்களும் வீரம், செல்வம் கல்வி என்பவற்றை வேண்டி துர்கை, லட்சுமி, சரஸ்வதி போன்ற தெய்வங்களுக்கு விரதம் இருந்து வழிபடுவதாகும். நவராத்திரி விரதமானது பெரும்பாலும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் வரும்.



இந்தக் காலத்தில் பூமியின் வடக்கு கோளம் சூரியனை விட்டு விலகி பகலில் ஒளி குறைவாகவும், இரவில் ஒளி அதிகமாகவும் இருக்கும். அந்தவகையில், 2023ஆம் ஆண்டிற்கான நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்த ஆண்டிற்கான நவராத்திரியானது  ஒக்டோபர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று ஆரம்பமாகி ஒக்டோபர் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வருகிறது.



நவராத்திரியின் முதல் நாளில் கலசம் வைத்து சிலர் வழிபடுவார்கள். அந்தவகையில் இன்று காலை 11:44 முதல் மதியம் 12:30 மணி வரை கலசம் வைத்து வழிபட ஏற்ற நேரம் ஆகும்.

அதிகாலை எழுந்து நீராடி தியானம் செய்து இந்த 9 நாட்களும் வழிபட வேண்டும். 9 நாட்களும் நல்ல நேரத்தில் சம்பிரதாயப்படி கலசம் வைத்து அந்நாளுக்கு ஏற்ற தேவியை நினைத்து மலர்கள், பழங்கள் என்பவற்றை படைத்து தேவிகளுக்குறிய மந்திரத்தை சொல்லி தினமும் வழிபட வேண்டும்.

கலசம் வைத்து வழிபடும் இடத்தில் தினமும் சுத்தமான நெய் தீபம் ஏற்றி 9 நாட்கள் மலர்களை அர்ச்சிக்கவும். இவ்வாறு வழிபட்டுவதால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

ஒருவர் இந்த நவராத்திரியில் தன் வீட்டீலேயே மாபெரும் பிரபஞ்ச சக்தியையும் ஐம்பூத சக்திகளையும் தருவித்து தெய்வீகசக்தியை நிலைப்பெறச் செய்து, ஆனந்தமாக வாழ நினைத்தால் நவராத்திரி பூஜையை மேற்கொள்வது நல்லது.


இன்று ஆரம்பமாகும் நவராத்திரி விழாவின் சிறப்பும், மகத்துவமும் samugammedia நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாள்கள் போரிட்டு 10ஆவது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.நவராத்திரி விரதமானது ஒன்பது நாட்களும் வீரம், செல்வம் கல்வி என்பவற்றை வேண்டி துர்கை, லட்சுமி, சரஸ்வதி போன்ற தெய்வங்களுக்கு விரதம் இருந்து வழிபடுவதாகும். நவராத்திரி விரதமானது பெரும்பாலும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் வரும்.இந்தக் காலத்தில் பூமியின் வடக்கு கோளம் சூரியனை விட்டு விலகி பகலில் ஒளி குறைவாகவும், இரவில் ஒளி அதிகமாகவும் இருக்கும். அந்தவகையில், 2023ஆம் ஆண்டிற்கான நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாகியுள்ளது.இந்த ஆண்டிற்கான நவராத்திரியானது  ஒக்டோபர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று ஆரம்பமாகி ஒக்டோபர் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வருகிறது.நவராத்திரியின் முதல் நாளில் கலசம் வைத்து சிலர் வழிபடுவார்கள். அந்தவகையில் இன்று காலை 11:44 முதல் மதியம் 12:30 மணி வரை கலசம் வைத்து வழிபட ஏற்ற நேரம் ஆகும்.அதிகாலை எழுந்து நீராடி தியானம் செய்து இந்த 9 நாட்களும் வழிபட வேண்டும். 9 நாட்களும் நல்ல நேரத்தில் சம்பிரதாயப்படி கலசம் வைத்து அந்நாளுக்கு ஏற்ற தேவியை நினைத்து மலர்கள், பழங்கள் என்பவற்றை படைத்து தேவிகளுக்குறிய மந்திரத்தை சொல்லி தினமும் வழிபட வேண்டும்.கலசம் வைத்து வழிபடும் இடத்தில் தினமும் சுத்தமான நெய் தீபம் ஏற்றி 9 நாட்கள் மலர்களை அர்ச்சிக்கவும். இவ்வாறு வழிபட்டுவதால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.ஒருவர் இந்த நவராத்திரியில் தன் வீட்டீலேயே மாபெரும் பிரபஞ்ச சக்தியையும் ஐம்பூத சக்திகளையும் தருவித்து தெய்வீகசக்தியை நிலைப்பெறச் செய்து, ஆனந்தமாக வாழ நினைத்தால் நவராத்திரி பூஜையை மேற்கொள்வது நல்லது.

Advertisement

Advertisement

Advertisement