• May 03 2024

சிங்கள தேசத்தின் சுதந்திர நாள், அது தமிழர் தேசத்தின் கரிநாள் : அலையெனத் திரள்வோம் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

Tamil nila / Feb 2nd 2023, 8:14 pm
image

Advertisement

தமிழர்களின் இறைமையினை பறித்துள்ள சிங்கள பேரினவாத அரசானது,தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்துள்ள நிலையில், சிங்கள தேசத்தின் சுதந்திர நாள் என்பது தமிழர் தேசத்தின் கரிநாளாகவே உள்ளது.


பெப்-4 இந்நாளில், தமிழர் தாயகத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினாலும், வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர், தமிழர் சமூகத்தினாலும் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினை தெரிவிக்கின்றது.


இப்பேரணியில் தாயக உறவுகளை எழுச்சியுடன் பங்கெடுத்து, தமிழர் தேசத்தின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான குரலை, உலகின் செவிப்பறைகளை நோக்கி ஓங்கி ஒலிக்க அன்புரிமையோடு வேண்டுகின்றோம்.


இதேவேளை இந்நாளில் புலம்பெயர் தேசங்களில் சமூக அரசியல் அமைப்புக்களால் முன்னெடுக்கப்படுகின்ற கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு எமது தோழமையினைத் தெரிவித்துக் கொள்வதோடு, அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.


இலங்கைத்தீவு முழுவதமே சிங்கள தேசம் என்ற மனநிலையில், தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணையுடன் பௌத்தமயமாக்கல், சிங்கள மயமாக்கலை மேற்கொண்டு வருகின்றது. 


இனஅழிப்புக்கான பொறுப்புக்கூறலை ஜெனீவாவில் புதைத்துவிட்டு, தற்போது அரசியல் தீர்வு என்ற பெயரில் தமிழர்களை ஏமாற்றுகின்ற வித்தையை உலகிற்கு காட்ட முனைகின்றது.


இந்நிலையில், சிறிலங்காவின் சுதந்திர நாளை, தமிழர் தேசத்தின் கரிநாளாக வெளிக்காட்டுவதோடு, எமது நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான குரலை மீண்டும் ஓங்கி ஒலிக்க அணிதிரள்வோம்.

சிங்கள தேசத்தின் சுதந்திர நாள், அது தமிழர் தேசத்தின் கரிநாள் : அலையெனத் திரள்வோம் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்களின் இறைமையினை பறித்துள்ள சிங்கள பேரினவாத அரசானது,தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்துள்ள நிலையில், சிங்கள தேசத்தின் சுதந்திர நாள் என்பது தமிழர் தேசத்தின் கரிநாளாகவே உள்ளது.பெப்-4 இந்நாளில், தமிழர் தாயகத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினாலும், வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர், தமிழர் சமூகத்தினாலும் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினை தெரிவிக்கின்றது.இப்பேரணியில் தாயக உறவுகளை எழுச்சியுடன் பங்கெடுத்து, தமிழர் தேசத்தின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான குரலை, உலகின் செவிப்பறைகளை நோக்கி ஓங்கி ஒலிக்க அன்புரிமையோடு வேண்டுகின்றோம்.இதேவேளை இந்நாளில் புலம்பெயர் தேசங்களில் சமூக அரசியல் அமைப்புக்களால் முன்னெடுக்கப்படுகின்ற கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு எமது தோழமையினைத் தெரிவித்துக் கொள்வதோடு, அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.இலங்கைத்தீவு முழுவதமே சிங்கள தேசம் என்ற மனநிலையில், தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணையுடன் பௌத்தமயமாக்கல், சிங்கள மயமாக்கலை மேற்கொண்டு வருகின்றது. இனஅழிப்புக்கான பொறுப்புக்கூறலை ஜெனீவாவில் புதைத்துவிட்டு, தற்போது அரசியல் தீர்வு என்ற பெயரில் தமிழர்களை ஏமாற்றுகின்ற வித்தையை உலகிற்கு காட்ட முனைகின்றது.இந்நிலையில், சிறிலங்காவின் சுதந்திர நாளை, தமிழர் தேசத்தின் கரிநாளாக வெளிக்காட்டுவதோடு, எமது நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான குரலை மீண்டும் ஓங்கி ஒலிக்க அணிதிரள்வோம்.

Advertisement

Advertisement

Advertisement