• Apr 26 2024

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் வடக்கு கிழக்கு மக்களின் கோரிக்கையினை எதிர்க்கவில்லை-திகாம்பரம் கருத்து!

Sharmi / Jan 30th 2023, 4:57 pm
image

Advertisement

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் வடக்கு கிழக்கு மக்களின் கோரிக்கையினை எதிர்க்கவில்லை எனவும் மாறாக அதற்கு பூரணமான ஆதரவினை வழங்குவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

அத்துடன் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அவர் இதற்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சரவையில் இருந்தபோதும் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தியிருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தீர்வு விடயம் தொடர்பாக கலந்துரையாடி வருவதாக பழனி திகாம்பரம் மேலும் தெரிவித்திருந்தார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் வடக்கு கிழக்கு மக்களின் கோரிக்கையினை எதிர்க்கவில்லை-திகாம்பரம் கருத்து இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் வடக்கு கிழக்கு மக்களின் கோரிக்கையினை எதிர்க்கவில்லை எனவும் மாறாக அதற்கு பூரணமான ஆதரவினை வழங்குவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.அத்துடன் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அவர் இதற்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.அதேபோல பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சரவையில் இருந்தபோதும் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தியிருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தீர்வு விடயம் தொடர்பாக கலந்துரையாடி வருவதாக பழனி திகாம்பரம் மேலும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement