• May 20 2024

இராணுவத்தினருக்கு தண்டனை வழங்காத இலங்கை அரசு; மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி! SamugamMedia

Chithra / Mar 11th 2023, 10:03 am
image

Advertisement

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு பாராட்டியுள்ளது.

இருப்பினும் அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்காதமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் ஏற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பது குறித்த மீளாய்வுக்கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளது.


இதேநேரம் இராணுவத்தின் பிடியில் இருந்த 92 வீதமான தனியார் காணிகள் முறையாக உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டமைக்கும் மனித உரிமைகள் மீளாய்வுக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் மீதான தலையீடு குறித்தும் மனித உரிமைகள் மீளாய்வுக் குழு கவலை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மை அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் ஏற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பது குறித்த மீளாய்வுக்கூட்டத்தில் குறித்த குழு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்தோடு அரச அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் கொண்டிருந்த நிபுணத்துவத்தின் அடிப்படையில் அதற்கு தகுதி பெற்றிருந்தார்கள் என்றும் ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

மேலும் பாலின சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் உள்ளிட்ட பல அபிவிருத்திகள் இலங்கைக்குள் இடம்பெற்றுள்ளதாகவும் அனைத்து மக்களுக்குமான மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

21 ஆவது திருத்தும் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனநாயக ஆட்சி, முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வை, அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் அமைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இராணுவத்தினருக்கு தண்டனை வழங்காத இலங்கை அரசு; மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி SamugamMedia உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு பாராட்டியுள்ளது.இருப்பினும் அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்காதமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் ஏற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பது குறித்த மீளாய்வுக்கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளது.இதேநேரம் இராணுவத்தின் பிடியில் இருந்த 92 வீதமான தனியார் காணிகள் முறையாக உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டமைக்கும் மனித உரிமைகள் மீளாய்வுக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் மீதான தலையீடு குறித்தும் மனித உரிமைகள் மீளாய்வுக் குழு கவலை வெளியிட்டுள்ளது.இதையடுத்து, இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மை அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் ஏற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பது குறித்த மீளாய்வுக்கூட்டத்தில் குறித்த குழு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.அத்தோடு அரச அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் கொண்டிருந்த நிபுணத்துவத்தின் அடிப்படையில் அதற்கு தகுதி பெற்றிருந்தார்கள் என்றும் ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.மேலும் பாலின சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் உள்ளிட்ட பல அபிவிருத்திகள் இலங்கைக்குள் இடம்பெற்றுள்ளதாகவும் அனைத்து மக்களுக்குமான மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.21 ஆவது திருத்தும் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனநாயக ஆட்சி, முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வை, அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் அமைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement