• Nov 19 2024

சர்வதேசத்தை ஏமாற்றும் இலங்கை அரசு..! சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு

Chithra / Dec 6th 2023, 11:58 am
image

 

இலங்கை அரசு சர்வதேசத்தை ஏமாற்றிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இலங்கையில் அமுலிலுள்ள மிகவும் சர்சைக்குரிய சட்டங்களில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தின் காரணமாக இலங்கை பல வருடங்களாக சர்வதேசத்தில் மிகவும் கவனம் பெற்ற நாடாக காணப்படுகின்றது.

இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சி செய்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையான காரணங்களின்றி முஸ்லிம்களையும், தமிழர்களையும் தடுத்து வைப்பதற்கும், போலியான குற்ற ஒப்புதல்களைப் பெறுவதற்கும் இந்தப் பயங்கரமான சட்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றன.

குறிப்பாக 2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட சிங்கள இளைஞர்கள் இப்பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் எனக் கோரி 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நாடு தழுவிய மொபைல் கையொப்ப பிரச்சாரத்திற்கு நானும்,  எம் ஏ சுமந்திரனும் தலைமை தாங்கினோம்.

இப் பிரச்சாரத்திற்கு நாடு முழுவதும் இருந்து பிரசைகளும் செயற்பாட்டாளர்களும் எஸ்எல்பிபி தவிர்ந்த சகல அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கிருந்தன. 

கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் அபிவிருத்தி குறித்து கவலையடைவதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைத் தடை குறித்து சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் பகிரங்கமாகக் கூறியது. 

ஆனால் அதனை  இலங்கை அரசு  நடைமுறைப்படுத்தியதா?

இதுபோன்ற உறுதிமொழிகள் வெளிப்படையாக இருந்தும். கடந்த மாதம் நினைவேந்தல் தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஒன்பது பேரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்  போலீசார் கைது செய்துள்ளனர். 

எனவே நாட்டிற்குள் நல்லிணக்கம், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றிப் பேசி சர்வதேச சமூகத்தையும் மனித உரிமைகள் பேரவையையும் தவறாக வழிநடத்த அரசாங்கம் முயல்கிறதா? இவ்வாறு சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேசத்தை ஏமாற்றும் இலங்கை அரசு. சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு  இலங்கை அரசு சர்வதேசத்தை ஏமாற்றிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் அமுலிலுள்ள மிகவும் சர்சைக்குரிய சட்டங்களில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தின் காரணமாக இலங்கை பல வருடங்களாக சர்வதேசத்தில் மிகவும் கவனம் பெற்ற நாடாக காணப்படுகின்றது.இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சி செய்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையான காரணங்களின்றி முஸ்லிம்களையும், தமிழர்களையும் தடுத்து வைப்பதற்கும், போலியான குற்ற ஒப்புதல்களைப் பெறுவதற்கும் இந்தப் பயங்கரமான சட்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றன.குறிப்பாக 2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட சிங்கள இளைஞர்கள் இப்பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.இதனையடுத்து பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் எனக் கோரி 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நாடு தழுவிய மொபைல் கையொப்ப பிரச்சாரத்திற்கு நானும்,  எம் ஏ சுமந்திரனும் தலைமை தாங்கினோம்.இப் பிரச்சாரத்திற்கு நாடு முழுவதும் இருந்து பிரசைகளும் செயற்பாட்டாளர்களும் எஸ்எல்பிபி தவிர்ந்த சகல அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கிருந்தன. கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் அபிவிருத்தி குறித்து கவலையடைவதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைத் தடை குறித்து சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் பகிரங்கமாகக் கூறியது. ஆனால் அதனை  இலங்கை அரசு  நடைமுறைப்படுத்தியதாஇதுபோன்ற உறுதிமொழிகள் வெளிப்படையாக இருந்தும். கடந்த மாதம் நினைவேந்தல் தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஒன்பது பேரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்  போலீசார் கைது செய்துள்ளனர். எனவே நாட்டிற்குள் நல்லிணக்கம், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றிப் பேசி சர்வதேச சமூகத்தையும் மனித உரிமைகள் பேரவையையும் தவறாக வழிநடத்த அரசாங்கம் முயல்கிறதா இவ்வாறு சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement