• May 03 2024

கவனயீனமாக செயல்படும் இலங்கை ரயில்வே துறை!!

crownson / Dec 28th 2022, 10:17 am
image

Advertisement

மணி மற்றும் ஒளி சமிக்ஞைகளுடன் கூடிய கிட்டத்தட்ட அறுபது புகையிரத கடவைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ரயில்வே சிக்னலிங் உப திணைக்களத்தின் பிரதான பொறியியலாளர் சிந்தக ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நானூற்று முப்பது மணி மற்றும் ஒளி சமிக்ஞைகள் உள்ளன, ஆனால் கிட்டத்தட்ட அறுபது சமிக்ஞை இயந்திரங்கள் உடைந்துள்ளன என்று தலைமை பொறியாளர் கூறியுள்ளார்.

கரையோர வீதிகள் மற்றும் புத்தளம் வீதியில் அதிகளவான கடவைகளில் இந்த ஆபத்தான நிலை காணப்படுவதாகவும், நடைமுறை சமிக்ஞைகளை பயன்படுத்தி புகையிரதங்களை இயக்குவதற்கு புகையிரத ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பழுதடைந்த சிக்னல்களை புனரமைக்கும் பணிகளும், சிக்னல் அமைப்பை நவீனப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், புகையிரதப் பாதைகள் உட்பட புகையிரத வீதிகளில் சிக்னல் கேபிள்களை போதைப்பொருள் வியாபாரிகள் துண்டிப்பதாலேயே சிக்னல் கோளாறுகள் ஏற்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் விசேட கவனம் செலுத்தி நாசகாரர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று காலை மருதானை மற்றும் தெமட்டகொட புகையிரத நிலையங்களுக்கு அருகில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை கணிசமான நேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கவனயீனமாக செயல்படும் இலங்கை ரயில்வே துறை மணி மற்றும் ஒளி சமிக்ஞைகளுடன் கூடிய கிட்டத்தட்ட அறுபது புகையிரத கடவைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ரயில்வே சிக்னலிங் உப திணைக்களத்தின் பிரதான பொறியியலாளர் சிந்தக ஜயசேகர தெரிவித்துள்ளார்.நானூற்று முப்பது மணி மற்றும் ஒளி சமிக்ஞைகள் உள்ளன, ஆனால் கிட்டத்தட்ட அறுபது சமிக்ஞை இயந்திரங்கள் உடைந்துள்ளன என்று தலைமை பொறியாளர் கூறியுள்ளார்.கரையோர வீதிகள் மற்றும் புத்தளம் வீதியில் அதிகளவான கடவைகளில் இந்த ஆபத்தான நிலை காணப்படுவதாகவும், நடைமுறை சமிக்ஞைகளை பயன்படுத்தி புகையிரதங்களை இயக்குவதற்கு புகையிரத ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த பழுதடைந்த சிக்னல்களை புனரமைக்கும் பணிகளும், சிக்னல் அமைப்பை நவீனப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.மேலும், புகையிரதப் பாதைகள் உட்பட புகையிரத வீதிகளில் சிக்னல் கேபிள்களை போதைப்பொருள் வியாபாரிகள் துண்டிப்பதாலேயே சிக்னல் கோளாறுகள் ஏற்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் விசேட கவனம் செலுத்தி நாசகாரர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை நேற்று காலை மருதானை மற்றும் தெமட்டகொட புகையிரத நிலையங்களுக்கு அருகில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை கணிசமான நேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement