• May 20 2024

உதவி செய்தவரை விட்டுப் பிரியாத நாரை..! மெய்சிலிர்க்க வைக்கும் பாசப் போராட்டம்!SamugamMedia

Sharmi / Mar 8th 2023, 12:29 pm
image

Advertisement

உத்தரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள மண்ட்கா என்ற கிராமத்தில் வசிக்கும் முகமது ஆரிஃப்புடன் நாரை ஒன்று கடந்த ஒரு வருட காலமாக தோழமையாக பழகி வருகின்றமை பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த நாரை ஒரு ஆண்டுக்கு முன்னதாக  மண்ட்கா  கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள வயல்வெளியில் காயம் அடைந்த நிலையில் ஒரு கால் முறிந்து பறக்க முடியாத நிலையில் கிடந்துள்ளது.


அதனை முதல் தடவையாக  கண்ட முகமது ஆரிஃப் முதலில் பயமடைந்தாலும் பிறகு தைரியமாக பறவையை வீட்டிற்கு கொண்டு சென்று  அதன் காலில் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு தடவி சிகிச்சையளித்து வந்துள்ளார். அதன் காரணமாக பறவையின் கால் குணமாகியுள்ளது.

கால் குணமாகிய போது குறித்த நாரை முகமது ஆரிஃப்பை விட்டு காட்டிற்கு செல்லாது அவருடனும் அவரது குடும்பத்தாருடனும் நெருக்கமாக வாழ தொடங்கியுள்ளது.

இது குறித்து ஆரிஃப் தெரிவிக்கையில் ,

முதலில் அந்த நாரையினை கண்டு அச்சமடைந்தேன். பின்னர் இரக்கமடைந்து வீட்டிற்கு எடுத்து வந்து சிகிச்சை செய்தேன். குணமடைய  பறந்து விடுமென நினைத்தேன். ஆனால் அது வெளியில் சென்றாலும் இரவில் வீட்டிற்கு வந்து விடும். நான் தேடிச்  செல்வதில்லை. மேலும்  குடும்பத்தாருடனும் மிக நெருக்கமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


உதவி செய்தவரை விட்டுப் பிரியாத நாரை. மெய்சிலிர்க்க வைக்கும் பாசப் போராட்டம்SamugamMedia உத்தரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள மண்ட்கா என்ற கிராமத்தில் வசிக்கும் முகமது ஆரிஃப்புடன் நாரை ஒன்று கடந்த ஒரு வருட காலமாக தோழமையாக பழகி வருகின்றமை பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த நாரை ஒரு ஆண்டுக்கு முன்னதாக  மண்ட்கா  கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள வயல்வெளியில் காயம் அடைந்த நிலையில் ஒரு கால் முறிந்து பறக்க முடியாத நிலையில் கிடந்துள்ளது. அதனை முதல் தடவையாக  கண்ட முகமது ஆரிஃப் முதலில் பயமடைந்தாலும் பிறகு தைரியமாக பறவையை வீட்டிற்கு கொண்டு சென்று  அதன் காலில் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு தடவி சிகிச்சையளித்து வந்துள்ளார். அதன் காரணமாக பறவையின் கால் குணமாகியுள்ளது. கால் குணமாகிய போது குறித்த நாரை முகமது ஆரிஃப்பை விட்டு காட்டிற்கு செல்லாது அவருடனும் அவரது குடும்பத்தாருடனும் நெருக்கமாக வாழ தொடங்கியுள்ளது. இது குறித்து ஆரிஃப் தெரிவிக்கையில் , முதலில் அந்த நாரையினை கண்டு அச்சமடைந்தேன். பின்னர் இரக்கமடைந்து வீட்டிற்கு எடுத்து வந்து சிகிச்சை செய்தேன். குணமடைய  பறந்து விடுமென நினைத்தேன். ஆனால் அது வெளியில் சென்றாலும் இரவில் வீட்டிற்கு வந்து விடும். நான் தேடிச்  செல்வதில்லை. மேலும்  குடும்பத்தாருடனும் மிக நெருக்கமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement