• May 12 2025

தனக்குத்தானே சிலை வைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் விசித்திர செயல்

Thansita / May 11th 2025, 9:15 pm
image

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளார்.  

அதாவது  டிரம்ப், கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் இருந்து நூலிழையில் தப்பித்தார். அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக இந்த சிலையை வைத்துள்ளார்

இந்தியாவில் தான் சிலை அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறது என்று பார்த்தால், தற்போது அமெரிக்காவிலும் இதே பாணியை அரசியல்வாதிகள் கையில் எடுத்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

கடந்த 2024ம் ஆண்டு பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் அந்த சம்பவம் நடந்தது. அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருந்த டிரம்ப், தேர்தல் பிரசாரத்திற்காக இங்கு வந்திருந்தார்.

திறந்த மேடையில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுக்கு மத்தியில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது 

பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தேடி கண்டுபிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பு மிக்க நபராக இருக்கும் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார்? அவருக்கு பின்னால் யாரேனும் இருக்கிறார்களா? என்கிற கோணத்தில் விசாரணை தொடங்கியது.

 

மறுபுறம் தேர்தலில் இவர் வெற்றி வாகை சூடினார். இந்நிலையில் தற்போது அத்துயரச் சம்பவத்தை நினைவுகூறும் வகையில் தனக்குத்தானே சிலைவைத்துள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியள்ளமை குறிப்பிடத்தக்கது

தனக்குத்தானே சிலை வைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் விசித்திர செயல் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளார்.  அதாவது  டிரம்ப், கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் இருந்து நூலிழையில் தப்பித்தார். அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக இந்த சிலையை வைத்துள்ளார்இந்தியாவில் தான் சிலை அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறது என்று பார்த்தால், தற்போது அமெரிக்காவிலும் இதே பாணியை அரசியல்வாதிகள் கையில் எடுத்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கடந்த 2024ம் ஆண்டு பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் அந்த சம்பவம் நடந்தது. அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருந்த டிரம்ப், தேர்தல் பிரசாரத்திற்காக இங்கு வந்திருந்தார்.திறந்த மேடையில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுக்கு மத்தியில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தேடி கண்டுபிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பு மிக்க நபராக இருக்கும் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார் அவருக்கு பின்னால் யாரேனும் இருக்கிறார்களா என்கிற கோணத்தில் விசாரணை தொடங்கியது. மறுபுறம் தேர்தலில் இவர் வெற்றி வாகை சூடினார். இந்நிலையில் தற்போது அத்துயரச் சம்பவத்தை நினைவுகூறும் வகையில் தனக்குத்தானே சிலைவைத்துள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement