• May 09 2024

தனியார் பேருந்து உாிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு தீர்வு வழங்கப்படும்! வடக்கு ஆளுநர் உறுதி

Chithra / Feb 29th 2024, 1:49 pm
image

Advertisement


இதேவேளை தனியார் பேருந்து உாிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு இன்று பிற்பகல் 6 மணிக்கு தீர்வு வழங்கப்படும் என வடக்கு மாகாணம் ஆளுநர் உறுதி வழங்கியுள்ளார்.

போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகைதந்த ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து உாிமையாளா்கள் இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதோடு சிறிது நேரம் ஆஸ்பத்திரி வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் தனியாா் பேருந்து உாிமையாளா்களின் கோாிக்கை தொடா்பாக பேசுவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலரை ஆளுநரை சந்திப்பதற்காக அழைத்து சென்றார்.

பின்னர் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகைதந்த ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று பிற்பகல் 6 மணிக்கு ஆளுநர் செயலகத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இலங்கை போக்குவரத்து சபையினர் மற்றும் தனியாா் பேருந்து உாிமையாளா்கள் சங்கத்தினருடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பொற்றுத்தருவதாக உறுதி வழங்கினார்.

ஆளுநரின் வாக்குறுதியை அடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட தனியாா் பேருந்து உாிமையாளா்கள் சங்கத்தினர் தொடர்ந்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


தனியார் பேருந்து உாிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு தீர்வு வழங்கப்படும் வடக்கு ஆளுநர் உறுதி இதேவேளை தனியார் பேருந்து உாிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு இன்று பிற்பகல் 6 மணிக்கு தீர்வு வழங்கப்படும் என வடக்கு மாகாணம் ஆளுநர் உறுதி வழங்கியுள்ளார்.போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகைதந்த ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து உாிமையாளா்கள் இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இதனால் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதோடு சிறிது நேரம் ஆஸ்பத்திரி வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.சம்பவ இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் தனியாா் பேருந்து உாிமையாளா்களின் கோாிக்கை தொடா்பாக பேசுவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலரை ஆளுநரை சந்திப்பதற்காக அழைத்து சென்றார்.பின்னர் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகைதந்த ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று பிற்பகல் 6 மணிக்கு ஆளுநர் செயலகத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இலங்கை போக்குவரத்து சபையினர் மற்றும் தனியாா் பேருந்து உாிமையாளா்கள் சங்கத்தினருடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பொற்றுத்தருவதாக உறுதி வழங்கினார்.ஆளுநரின் வாக்குறுதியை அடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட தனியாா் பேருந்து உாிமையாளா்கள் சங்கத்தினர் தொடர்ந்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement