• May 03 2024

யாழில் மாணவியின் தாக்குதலால் தலைதெறிக்க ஓட்டமெடுத்த மாணவர் ; காரணம் இதுதான்!

Tamil nila / Jan 13th 2023, 8:39 pm
image

Advertisement

யாழ் பிரபல பாடசாலை மாணவி ஒருவர் நடுவீதியில் பலரும் பார்க்கும் போது மாணவன் ஒருவரை கல்லால் எறிந்து துரத்தித் துரத்தி தாக்கிய சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.


யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் நாவலர் வீதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,


பாடசாலை முடித்து சைக்கிளில் வீடு சென்று கொண்டிருந்த மாணவிகள் இருவரின் பின்னால் சைக்கிளில் வேகமாக வந்த மாணவர்கள் இருவர் ஒரு மாணவியை படப்பெயர் கூறி கத்தியுள்ளார்கள்.


இதனால் கோபமடைந்த மாணவி நடுவீதியில் சைக்கிளை விட்டுவிட்டு கற்களை எடுத்து மாணவர்களில் ஒருவரை துரத்திச் சென்று தாக்கியுள்ளார்.


மாணவி எறிந்த கல் மாணவனின் முதுகுப் பகுதியில் அணிந்திருந்த புத்தகப்பையில் பட்டு வீழ்ந்துள்ளது. மாணவியின் ஆக்ரோசத் தாக்குதலை அடுத்து மாணவன் நிலை குலைந்து ஓடித்தப்பியுள்ளான்.


அப்போது அங்கிருந்த வர்த்தகநிலையத்தில் நின்றவர்கள் மாணவர்களை பிடிக்க முற்பட்ட போதும் அவர்கள் தப்பியதாகத் தெரியவருகின்றது.


இந்நிலையில், பாடசாலை விட்டு மாணவர்கள் செல்லும் நேரத்தில் நடந்த இச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாகவும் கூறப்படுகின்றது.  

 

யாழில் மாணவியின் தாக்குதலால் தலைதெறிக்க ஓட்டமெடுத்த மாணவர் ; காரணம் இதுதான் யாழ் பிரபல பாடசாலை மாணவி ஒருவர் நடுவீதியில் பலரும் பார்க்கும் போது மாணவன் ஒருவரை கல்லால் எறிந்து துரத்தித் துரத்தி தாக்கிய சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் நாவலர் வீதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,பாடசாலை முடித்து சைக்கிளில் வீடு சென்று கொண்டிருந்த மாணவிகள் இருவரின் பின்னால் சைக்கிளில் வேகமாக வந்த மாணவர்கள் இருவர் ஒரு மாணவியை படப்பெயர் கூறி கத்தியுள்ளார்கள்.இதனால் கோபமடைந்த மாணவி நடுவீதியில் சைக்கிளை விட்டுவிட்டு கற்களை எடுத்து மாணவர்களில் ஒருவரை துரத்திச் சென்று தாக்கியுள்ளார்.மாணவி எறிந்த கல் மாணவனின் முதுகுப் பகுதியில் அணிந்திருந்த புத்தகப்பையில் பட்டு வீழ்ந்துள்ளது. மாணவியின் ஆக்ரோசத் தாக்குதலை அடுத்து மாணவன் நிலை குலைந்து ஓடித்தப்பியுள்ளான்.அப்போது அங்கிருந்த வர்த்தகநிலையத்தில் நின்றவர்கள் மாணவர்களை பிடிக்க முற்பட்ட போதும் அவர்கள் தப்பியதாகத் தெரியவருகின்றது.இந்நிலையில், பாடசாலை விட்டு மாணவர்கள் செல்லும் நேரத்தில் நடந்த இச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாகவும் கூறப்படுகின்றது.   

Advertisement

Advertisement

Advertisement