• Mar 15 2025

பேரினவாதத்தின் ஒற்றர் ஒருவரால் தமிழர் தேசம் சீரழிக்கப்படுகின்றது! நாவலன்

Chithra / Mar 15th 2025, 3:09 pm
image


தற்கால அரசியல் சூழலும், காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையிலும் தமிழ் மக்கள் ஒன்றாக பயணிக்க வேண்டியது அவசியமாகும் என சுட்டிக்காட்டியுள்ள  சனநாயக தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் கருணாகரன் நாவலன், அதுவே அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கூட்டான தமிழ்த்  தேசிய மக்கள்  முன்னணியுடனான தமது இணைவும் அமைகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (15) சனநாயக தமிழரசு கட்சி, தமிழ்த்  தேசிய மக்கள் 

முன்னணியுடன் இணைவு தொடர்பானது நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -

மக்களின் நலன் கருதியே இந்த கூட்டில் இணைந்துள்ளோம். இந்த பயணத்தில் எம்முடன் இன்னும் பல கட்சிகள் பயணிக்கின்ற்னர். 

இந்நேரம் சிங்கள பேரினவாதத்தின் ஒற்றர் ஒருவரால் இன்று தமிழர் தேசம் சீரழிக்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் மக்கள் சிங்கள ஆட்சியாளருக்கு தமது வாக்குகளை வழங்கியதன் வெளிப்பாடே இது.

கடந்த காலத்தில் தமிழ் அரச தலைவர்கள் சரியான பாதையை காட்டாமையே இன்றைய பல இன்னல்களுக்கும் காரணமாக இருக்கின்றது.

அதனால் எமது இந்த கூட்டில் இம்முறை இளைஞருக்கு  சந்தர்ப்பத்தை மக்கள் வழங்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு சிதைந்ததோ, இன்று தமிழரசு கட்சியும் சீரழிந்து செல்கின்றது. இதற்கு காரணம் அரசியலாகவே இருக்கின்றது.

இந்நேரம் தமிழ்  தேசியத்தை நேசிக்கும் தரப்புனரால் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்கவே இந்த கூடு உருவாக்கப்பட்டது.

தேசியத்தை வலியுறுத்தி, மக்களுக்கு அடிப்படை தேவையான பொருளாதார கட்டமைப்பை  உருவாக்கல், வாழ்வாதாரத்தை வலுவாக்கல் உள்ளிட்ட நோக்கங்களை முன்னிறுத்தியே எமது செயற்பாடுகள் அமையவுள்ளது.

இந்நேரம் கட்சியின் உள்ளீர்ப்பில் இருந்த ஒருமித்த கருத்தின்மையே கடந்த காலத்தில் இருந்த

கூட்டிலிருந்து  நாம் விலக காரணம்.

அந்தவகையில் தற்போதைய இந்த உதிய கூட்டின் பயணம் வெற்றி தரும் என்ற நம்பிக்கை இருக்கிந்தது.

என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

பேரினவாதத்தின் ஒற்றர் ஒருவரால் தமிழர் தேசம் சீரழிக்கப்படுகின்றது நாவலன் தற்கால அரசியல் சூழலும், காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையிலும் தமிழ் மக்கள் ஒன்றாக பயணிக்க வேண்டியது அவசியமாகும் என சுட்டிக்காட்டியுள்ள  சனநாயக தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் கருணாகரன் நாவலன், அதுவே அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கூட்டான தமிழ்த்  தேசிய மக்கள்  முன்னணியுடனான தமது இணைவும் அமைகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (15) சனநாயக தமிழரசு கட்சி, தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியுடன் இணைவு தொடர்பானது நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -மக்களின் நலன் கருதியே இந்த கூட்டில் இணைந்துள்ளோம். இந்த பயணத்தில் எம்முடன் இன்னும் பல கட்சிகள் பயணிக்கின்ற்னர். இந்நேரம் சிங்கள பேரினவாதத்தின் ஒற்றர் ஒருவரால் இன்று தமிழர் தேசம் சீரழிக்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் மக்கள் சிங்கள ஆட்சியாளருக்கு தமது வாக்குகளை வழங்கியதன் வெளிப்பாடே இது.கடந்த காலத்தில் தமிழ் அரச தலைவர்கள் சரியான பாதையை காட்டாமையே இன்றைய பல இன்னல்களுக்கும் காரணமாக இருக்கின்றது.அதனால் எமது இந்த கூட்டில் இம்முறை இளைஞருக்கு  சந்தர்ப்பத்தை மக்கள் வழங்க வேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு சிதைந்ததோ, இன்று தமிழரசு கட்சியும் சீரழிந்து செல்கின்றது. இதற்கு காரணம் அரசியலாகவே இருக்கின்றது.இந்நேரம் தமிழ்  தேசியத்தை நேசிக்கும் தரப்புனரால் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்கவே இந்த கூடு உருவாக்கப்பட்டது.தேசியத்தை வலியுறுத்தி, மக்களுக்கு அடிப்படை தேவையான பொருளாதார கட்டமைப்பை  உருவாக்கல், வாழ்வாதாரத்தை வலுவாக்கல் உள்ளிட்ட நோக்கங்களை முன்னிறுத்தியே எமது செயற்பாடுகள் அமையவுள்ளது.இந்நேரம் கட்சியின் உள்ளீர்ப்பில் இருந்த ஒருமித்த கருத்தின்மையே கடந்த காலத்தில் இருந்தகூட்டிலிருந்து  நாம் விலக காரணம்.அந்தவகையில் தற்போதைய இந்த உதிய கூட்டின் பயணம் வெற்றி தரும் என்ற நம்பிக்கை இருக்கிந்தது.என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement