• Sep 22 2024

தமிழ் மக்களின் கோரிக்கைகளை தமிழரசு கட்சி மறுதலித்துள்ளது - சுரேஷ் சுட்டிக்காட்டு!

Sharmi / Jan 14th 2023, 3:11 pm
image

Advertisement

தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வை நோக்கி தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்று பட்டு செயற்படவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டுள்ளன.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

குறிப்பாக தமிழ் பரப்பிலுள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபடவேண்டும் என தேவை மற்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் தமிழரசு கட்சி அனைவரினது எதிர்பார்ப்பிற்கு மாறாக செயற்பட்டுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை தமிழரசு கட்சி மறுதலித்துள்ளது - சுரேஷ் சுட்டிக்காட்டு தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வை நோக்கி தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்று பட்டு செயற்படவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டுள்ளன.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.குறிப்பாக தமிழ் பரப்பிலுள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபடவேண்டும் என தேவை மற்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் தமிழரசு கட்சி அனைவரினது எதிர்பார்ப்பிற்கு மாறாக செயற்பட்டுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement