• Dec 09 2024

தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அண்ணன்! அம்பாறையில் பயங்கரம்

Chithra / Sep 17th 2024, 7:34 am
image

 

வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளம் குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை  பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவமானது, நேற்று இரவு அம்பாறை  - சம்மாந்துறை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பக்கீர் முகையதீன் றோஜான் என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ரிப்பிட்டர் ரக துப்பாக்கியே இந்த படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தள்ளது.

சம்பவம் தொடர்பில் தம்பி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் என கூறப்படும் சந்தேக நபரான சகோதரரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த துப்பாக்கி பிரயோகம் சகோதரர்களிடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அண்ணன் அம்பாறையில் பயங்கரம்  வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளம் குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை  பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.குறித்த சம்பவமானது, நேற்று இரவு அம்பாறை  - சம்மாந்துறை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பக்கீர் முகையதீன் றோஜான் என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ரிப்பிட்டர் ரக துப்பாக்கியே இந்த படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தள்ளது.சம்பவம் தொடர்பில் தம்பி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் என கூறப்படும் சந்தேக நபரான சகோதரரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த துப்பாக்கி பிரயோகம் சகோதரர்களிடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement