• May 03 2024

திடீர் வீழ்ச்சி கண்ட டொலரின் பெறுமதி..! - தங்கத்தின் விலை நிலவரம் என்ன? samugammedia

Chithra / Apr 1st 2023, 9:39 am
image

Advertisement

பெப்ரவரி மாத இறுதியில் பதிவான 0.4 வீத மேலதிக பெறுமதியுடன் ஒப்பிடும் போது, ​​மார்ச் 31 வரையான காலப்பகுதியில் டொலருக்கு நிகரான ரூபாய் 10.9 வீத மேலதிக மதிப்பீட்டை பதிவு செய்துள்ளது.

இலங்கை ரூபாயானது யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட், யென், இந்திய ரூபா மற்றும் அவுஸ்ரேலிய டொலர் ஆகியவற்றுக்கு நிகரான ரூபாய் மதிப்பும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதையடுத்து நேற்றையதினம் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


அதன்படி 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 165,600 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 180,000 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் தங்கத்தின் விலையும் 25 டொலர்களால் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்று 1,983 டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திடீர் வீழ்ச்சி கண்ட டொலரின் பெறுமதி. - தங்கத்தின் விலை நிலவரம் என்ன samugammedia பெப்ரவரி மாத இறுதியில் பதிவான 0.4 வீத மேலதிக பெறுமதியுடன் ஒப்பிடும் போது, ​​மார்ச் 31 வரையான காலப்பகுதியில் டொலருக்கு நிகரான ரூபாய் 10.9 வீத மேலதிக மதிப்பீட்டை பதிவு செய்துள்ளது.இலங்கை ரூபாயானது யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட், யென், இந்திய ரூபா மற்றும் அவுஸ்ரேலிய டொலர் ஆகியவற்றுக்கு நிகரான ரூபாய் மதிப்பும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதையடுத்து நேற்றையதினம் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.அதன்படி 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 165,600 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 180,000 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.இதேவேளை, உலக சந்தையில் தங்கத்தின் விலையும் 25 டொலர்களால் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்று 1,983 டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement