• May 20 2024

1,385 ரூபாவாக உயரவுள்ள டொலரின் பெறுமதி..! இலங்கை மக்களுக்கு எம்.பியின் பேரிடிச் செய்தி samugammedia

Chithra / Jun 23rd 2023, 12:25 pm
image

Advertisement

தற்போதைய மதிப்பீட்டின்படி 2048 ஆம் ஆண்டளவில் டொலர் 1,385 ரூபாவாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் இந்த நாட்டின் மக்கள் தொகை 23 மில்லியனாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2048ஆம் ஆண்டு இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவேன் என ஜனாதிபதி தெரிவித்ததாகவும், அவ்வாறு செய்வதற்கு வருடாந்தம் 6.5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அவ்வாறு செய்யாவிட்டால் 2048ஆம் ஆண்டு ஜனாதிபதி கூறிய இலக்கை எட்டவே முடியாது என்றார்.

அந்த இலக்கை அடைவதற்கு 2048ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தனிநபர் வருமானம் 13,205 டொலர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளின்படி, 2026ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3% மட்டுமே இருக்கும் என்று அவர் தொடர்ந்து கூறினார்.


1,385 ரூபாவாக உயரவுள்ள டொலரின் பெறுமதி. இலங்கை மக்களுக்கு எம்.பியின் பேரிடிச் செய்தி samugammedia தற்போதைய மதிப்பீட்டின்படி 2048 ஆம் ஆண்டளவில் டொலர் 1,385 ரூபாவாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.அந்த நேரத்தில் இந்த நாட்டின் மக்கள் தொகை 23 மில்லியனாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.2048ஆம் ஆண்டு இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவேன் என ஜனாதிபதி தெரிவித்ததாகவும், அவ்வாறு செய்வதற்கு வருடாந்தம் 6.5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அவ்வாறு செய்யாவிட்டால் 2048ஆம் ஆண்டு ஜனாதிபதி கூறிய இலக்கை எட்டவே முடியாது என்றார்.அந்த இலக்கை அடைவதற்கு 2048ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தனிநபர் வருமானம் 13,205 டொலர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளின்படி, 2026ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3% மட்டுமே இருக்கும் என்று அவர் தொடர்ந்து கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement