• May 09 2024

4,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்..! அதிக சம்பளமும் வழங்கப்படும்! – அமைச்சரின் விசேட அறிவிப்பு! samugammedia

Chithra / Jun 23rd 2023, 12:19 pm
image

Advertisement

மின்சார சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் சுமார் 4,000 ஊழியர்கள் எதிர்காலத்தில் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நாட்களில் மின்சார சபையில் மனித வளக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதால், அந்த குழுவை உறுதிப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், மின்சார சபையில் தொடர்ந்து பணியாற்றி வருபவர்களை அடுத்த சில மாதங்களில் உறுதி செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த குழுவின் ஆட்சேர்ப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த குழு மின்சார சபையில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. 

அவை எதிர்காலத்தில் உறுதிப்படுத்தப்படும். தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பதவி உயர்வு நடைமுறைகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். 


மின்சார சபை மறுசீரமைப்பின் பின்னர் தற்போது பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் புதிய நிறுவனங்களில் இடம் வழங்கப்படும்.

அவர்களுக்கு தற்போதைய சம்பளத்தை விட அதிக சம்பளம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபையின் கீழ் தற்போது அனுபவிக்கும் வசதிகள் அவ்வாறே வழங்கப்படும் எனவும், எதிர்காலத்தில் புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தற்போது பணிபுரியும் நபர்களே இந்நிறுவனங்களில் பணிக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


4,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம். அதிக சம்பளமும் வழங்கப்படும் – அமைச்சரின் விசேட அறிவிப்பு samugammedia மின்சார சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் சுமார் 4,000 ஊழியர்கள் எதிர்காலத்தில் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இந்த நாட்களில் மின்சார சபையில் மனித வளக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதால், அந்த குழுவை உறுதிப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.ஆனால், மின்சார சபையில் தொடர்ந்து பணியாற்றி வருபவர்களை அடுத்த சில மாதங்களில் உறுதி செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அந்த குழுவின் ஆட்சேர்ப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த குழு மின்சார சபையில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. அவை எதிர்காலத்தில் உறுதிப்படுத்தப்படும். தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பதவி உயர்வு நடைமுறைகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். மின்சார சபை மறுசீரமைப்பின் பின்னர் தற்போது பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் புதிய நிறுவனங்களில் இடம் வழங்கப்படும்.அவர்களுக்கு தற்போதைய சம்பளத்தை விட அதிக சம்பளம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மின்சார சபையின் கீழ் தற்போது அனுபவிக்கும் வசதிகள் அவ்வாறே வழங்கப்படும் எனவும், எதிர்காலத்தில் புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது பணிபுரியும் நபர்களே இந்நிறுவனங்களில் பணிக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement