• Jan 26 2025

உத்தரவை மீறிப் பணயித்த வேன். துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸார்

Thansita / Jan 23rd 2025, 10:54 pm
image

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

வலயக் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொழும்பு வடக்கு மோட்டார் சைக்கிள் குழுவினர் வேனை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டில் வேனில் இருந்த ஒருவருக்கு  காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வேனை கிரேன்பாஸ் பொலிஸ் பிரிவில் சோதனைக்காக நிறுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் அது தொடர்ந்து சென்றதால் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வேனில் இருந்து சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உத்தரவை மீறிப் பணயித்த வேன். துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸார் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் வலயக் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொழும்பு வடக்கு மோட்டார் சைக்கிள் குழுவினர் வேனை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டில் வேனில் இருந்த ஒருவருக்கு  காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட வேனை கிரேன்பாஸ் பொலிஸ் பிரிவில் சோதனைக்காக நிறுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் அது தொடர்ந்து சென்றதால் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த வேனில் இருந்து சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement