• Nov 24 2024

இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும் - ரவூப் ஹக்கீம் சபையில் வலியுறுத்தல்! samugammedia

Tamil nila / Dec 3rd 2023, 12:13 pm
image

உலகில் எந்த நாட்டிலும் இடம்பெறாத அளவுக்கு இஸ்ரேல் யுத்தக் குற்றத்தை மேற்கொண்டு வருகிறது. 

ஆனால் அதனை தடுத்து நிறுத்துவதற்கு ச்ரவதேச நாடுகளுக்கு முடியாமல் போயிருக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மெழுகுவர்த்தியை கையில் ஏந்திய வண்ணம், பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் எவ்வாறு வடக்கில் நடவடிக்கை எடுக்கப்போகிறது என தெரிவித்திருந்தார். 

ஆனால் இதனையும் விட மோசமான சம்பவம் இஸ்ரேல் அரசாஙகம்பலஸ்தீனில் மேற்கொண்டு வருகிறது. 

இது தொடர்பில் அவர் என்ன சொல்லப்போகிறார் என கேட்கிறோம்.

எனவே, இஸ்ரேல் மிகவும் மோசமான யுத்தக்குற்றங்களை மேற்கொண்டு வருகிறது. 

இஸ்ரேலில் இடம்பெறுவது யுத்தக்குற்றம் இல்லை என்றால் உலகில் எந்த நாட்டிலும் யுத்தக்குற்றம் இடம்பெறுவதில்லை. 

அதனால் இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும். 

அதற்காக நாங்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். 

அந்த வகையிலேயே ஒற்றுமையை வலியுறுத்தி பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யுத்த நிறுத்தம் இடம்பெறும் வரை பலஸ்தீன் ஆதரவு சால்வையை தொடர்ந்து அணிந்திருப்போம் என்றார்.


இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும் - ரவூப் ஹக்கீம் சபையில் வலியுறுத்தல் samugammedia உலகில் எந்த நாட்டிலும் இடம்பெறாத அளவுக்கு இஸ்ரேல் யுத்தக் குற்றத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதனை தடுத்து நிறுத்துவதற்கு ச்ரவதேச நாடுகளுக்கு முடியாமல் போயிருக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மெழுகுவர்த்தியை கையில் ஏந்திய வண்ணம், பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் எவ்வாறு வடக்கில் நடவடிக்கை எடுக்கப்போகிறது என தெரிவித்திருந்தார். ஆனால் இதனையும் விட மோசமான சம்பவம் இஸ்ரேல் அரசாஙகம்பலஸ்தீனில் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பில் அவர் என்ன சொல்லப்போகிறார் என கேட்கிறோம்.எனவே, இஸ்ரேல் மிகவும் மோசமான யுத்தக்குற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலில் இடம்பெறுவது யுத்தக்குற்றம் இல்லை என்றால் உலகில் எந்த நாட்டிலும் யுத்தக்குற்றம் இடம்பெறுவதில்லை. அதனால் இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும். அதற்காக நாங்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். அந்த வகையிலேயே ஒற்றுமையை வலியுறுத்தி பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யுத்த நிறுத்தம் இடம்பெறும் வரை பலஸ்தீன் ஆதரவு சால்வையை தொடர்ந்து அணிந்திருப்போம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement