மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சேனாதிராஜாவின் புகழுடலுக்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் சார்பில் அதன் செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் இன்றையதினம் அஞ்சலி செலுத்தினார்.
யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்திலுள்ள அன்னாரின் இல்லத்துக்கு இன்று மாலை சென்ற துரை கணேசலிங்கம், மாவை.சேனாதிராஜாவின் புகழுடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை, உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைவர், முனைவர் நடா ராஜ்குமாரின் இரங்கல் செய்தியையும் வாசித்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெரும் தலைவர் மாவை சேனாதிராசாவின் இறுதிக் கிரியைகள் மாவிட்டபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவையின் புகழுடலுக்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தினர் இறுதி அஞ்சலி. மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சேனாதிராஜாவின் புகழுடலுக்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் சார்பில் அதன் செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் இன்றையதினம் அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்திலுள்ள அன்னாரின் இல்லத்துக்கு இன்று மாலை சென்ற துரை கணேசலிங்கம், மாவை.சேனாதிராஜாவின் புகழுடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.இதேவேளை, உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைவர், முனைவர் நடா ராஜ்குமாரின் இரங்கல் செய்தியையும் வாசித்தார்.இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெரும் தலைவர் மாவை சேனாதிராசாவின் இறுதிக் கிரியைகள் மாவிட்டபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.