• May 20 2024

வெடித்து சிதறியது உலகின் மிகப்பெரிய இராட்சத மீன்தொட்டி - வெள்ளம்போல் ஓடிய நீர்

Chithra / Dec 17th 2022, 2:29 pm
image

Advertisement

ஜெர்மனியில் நட்ச்சத்திர உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள நட்ச்சத்திர உணவகமான  ராடிசன் ப்ளூ (Radisson Blu) உணவகத்தின் வரவேற்புப் பகுதியில் 46 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த மீன் காட்சித் தொட்டியே இவ்வாறு வெடித்துள்ளது.


உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டியாக கூறப்படும் இது, ஒரு மில்லியன் லீட்டர் தண்ணீரால் நிரப்பப்பட்டு, 1,500 வெப்பமண்டல மீன்களால் நிரப்பப்பட்டிருந்தது.

இந்த மீன் தொட்டியானது இன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதில் தொட்டியில் நிரப்பப்பட்டிருந்த மில்லியன் லீட்டர் நீரும் வெள்ளம் போல் பாய்ந்து வீதிகளில் ஓடியது. இந்தச் சம்பவத்தில் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.


தகவல் அறிந்து விரைந்து வந்த 100க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள், சிதறிக் கிடந்த கண்ணாடி உள்ளிட்ட அபாயகரமானப் பொருட்களை அகற்றினர். உடனடியாக அந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த பெரிய சாலையும் மூடப்பட்டது. விபத்திற்கான காரணம் மீன் தொட்டியின் உறைபனி வெப்பநிலை கசிவு எனக் கூறப்படுகிறது.

இந்த விபத்துக் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். டிரோன்கள் மூலம் கண்ணாடித்துகள்கள் சிதறிய இடங்களை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

மீன் தொட்டி வெடித்ததை அடுத்து அருகில் உள்ள கடைகள் மற்றும் விடுதிகளில் இருந்தவர்களை காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.

அவர்களுக்கு மாற்று ஏற்பாடு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெர்லினின் முக்கிய சுற்றுலா அம்சமாக கருதப்படும் இந்த மீன் காட்சித்தொட்டி வெடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெடித்து சிதறியது உலகின் மிகப்பெரிய இராட்சத மீன்தொட்டி - வெள்ளம்போல் ஓடிய நீர் ஜெர்மனியில் நட்ச்சத்திர உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்தில் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறதுஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள நட்ச்சத்திர உணவகமான  ராடிசன் ப்ளூ (Radisson Blu) உணவகத்தின் வரவேற்புப் பகுதியில் 46 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த மீன் காட்சித் தொட்டியே இவ்வாறு வெடித்துள்ளது.உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டியாக கூறப்படும் இது, ஒரு மில்லியன் லீட்டர் தண்ணீரால் நிரப்பப்பட்டு, 1,500 வெப்பமண்டல மீன்களால் நிரப்பப்பட்டிருந்தது.இந்த மீன் தொட்டியானது இன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதில் தொட்டியில் நிரப்பப்பட்டிருந்த மில்லியன் லீட்டர் நீரும் வெள்ளம் போல் பாய்ந்து வீதிகளில் ஓடியது. இந்தச் சம்பவத்தில் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.தகவல் அறிந்து விரைந்து வந்த 100க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள், சிதறிக் கிடந்த கண்ணாடி உள்ளிட்ட அபாயகரமானப் பொருட்களை அகற்றினர். உடனடியாக அந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த பெரிய சாலையும் மூடப்பட்டது. விபத்திற்கான காரணம் மீன் தொட்டியின் உறைபனி வெப்பநிலை கசிவு எனக் கூறப்படுகிறது.இந்த விபத்துக் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். டிரோன்கள் மூலம் கண்ணாடித்துகள்கள் சிதறிய இடங்களை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.மீன் தொட்டி வெடித்ததை அடுத்து அருகில் உள்ள கடைகள் மற்றும் விடுதிகளில் இருந்தவர்களை காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.அவர்களுக்கு மாற்று ஏற்பாடு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெர்லினின் முக்கிய சுற்றுலா அம்சமாக கருதப்படும் இந்த மீன் காட்சித்தொட்டி வெடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement