• Oct 30 2024

யாழில் பெண் ஒருவரின் மோசமான செயல்...! அதிரடியாக கைது! samugammedia

Chithra / May 23rd 2023, 10:48 am
image

Advertisement

கடந்த 18ஆம் திகதி, அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அச்செழு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தாலி, தாலிக்கொடி, மோதிரம் மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்டிருந்த நிலையில், இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்த விடயமானது காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று (22) அச்செழு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து, தாலி மற்றும் தாலிக்கொடியை விற்று வாங்கிய சங்கிலி மற்றும் தோடு, ஒரு தொகை பணம், உருக்கிய நிலையிலான தங்கம் என்பன மீட்கப்பட்டன.


காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் அசேல வத்துக்கார அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெண், மீட்கப்பட்ட தங்கத்துடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பெண் ஒருவரின் மோசமான செயல். அதிரடியாக கைது samugammedia கடந்த 18ஆம் திகதி, அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அச்செழு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தாலி, தாலிக்கொடி, மோதிரம் மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்டிருந்த நிலையில், இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.இந்த விடயமானது காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இந்நிலையில் நேற்று (22) அச்செழு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து, தாலி மற்றும் தாலிக்கொடியை விற்று வாங்கிய சங்கிலி மற்றும் தோடு, ஒரு தொகை பணம், உருக்கிய நிலையிலான தங்கம் என்பன மீட்கப்பட்டன.காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் அசேல வத்துக்கார அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட பெண், மீட்கப்பட்ட தங்கத்துடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement