நுவரெலியா - கொட்டகலை – பாத்தியாபுரம் பகுதியில் உள்ள வீட்டு தோட்டம் ஒன்றில், வாழை மரத்தின் தண்டுப் பகுதியின் நடுவிலிருந்து வாழைக்குலை ஒன்று வெளிவந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக வாழை மரத்தின் உச்சிப் பகுதியிலேயே வாழைக்குலை உருவாகுவது வழக்கமான ஒன்றாகும். எனினும், குறித்த வாழைமரத்தில் தண்டின் நடுப்பகுதியில், இரு தண்டுகளுக்கு இடையில் இருந்து வாழைக்குலை வெளிவந்துள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த அரிய காட்சியை பார்வையிட அப்பகுதி மக்கள் பலரும் ஆர்வத்துடன் நேரில் வந்து காண்கின்றனர்.
“வயிற்றைப் பிளந்து வந்த பிள்ளை போல...” , “விதி மீறிய வாழை”, “உச்சி வரை பொறுக்காமல் இடையிலேயே குதித்த இளவஞ்சி வாழை” என மக்கள் இந்த இயற்கை நிகழ்வை வர்ணித்து வருகின்றனர்.
தாவரவியல் ரீதியில் இத்தகைய நிகழ்வுகள் அரிதானவை எனக் கருதப்பட்டாலும், பாத்தியாபுரம் பகுதியில் நிகழ்ந்த இந்த இயற்கை நிகழ்வு அப்பகுதிக்கு தனித்துவமான சுவாரஸ்யத்தை வழங்கியுள்ளது.
மேலும், இந்த அரிய காட்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
இடையிலேயே குதித்த இளவஞ்சி வாழைக்குலை; கொட்டகலை மக்கள் ஆச்சரியம் நுவரெலியா - கொட்டகலை – பாத்தியாபுரம் பகுதியில் உள்ள வீட்டு தோட்டம் ஒன்றில், வாழை மரத்தின் தண்டுப் பகுதியின் நடுவிலிருந்து வாழைக்குலை ஒன்று வெளிவந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக வாழை மரத்தின் உச்சிப் பகுதியிலேயே வாழைக்குலை உருவாகுவது வழக்கமான ஒன்றாகும். எனினும், குறித்த வாழைமரத்தில் தண்டின் நடுப்பகுதியில், இரு தண்டுகளுக்கு இடையில் இருந்து வாழைக்குலை வெளிவந்துள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.இந்த அரிய காட்சியை பார்வையிட அப்பகுதி மக்கள் பலரும் ஆர்வத்துடன் நேரில் வந்து காண்கின்றனர். தண்டின் பக்கவாட்டை வெடித்து வெளிவந்துள்ள வாழைக்குலை, செழிப்பாகவும் அடர்த்தியான சீப்புகளுடனும் காணப்படுவதால் அதிசய உணர்வை மேலும் அதிகரித்துள்ளது.“வயிற்றைப் பிளந்து வந்த பிள்ளை போல.” , “விதி மீறிய வாழை”, “உச்சி வரை பொறுக்காமல் இடையிலேயே குதித்த இளவஞ்சி வாழை” என மக்கள் இந்த இயற்கை நிகழ்வை வர்ணித்து வருகின்றனர். தாவரவியல் ரீதியில் இத்தகைய நிகழ்வுகள் அரிதானவை எனக் கருதப்பட்டாலும், பாத்தியாபுரம் பகுதியில் நிகழ்ந்த இந்த இயற்கை நிகழ்வு அப்பகுதிக்கு தனித்துவமான சுவாரஸ்யத்தை வழங்கியுள்ளது.மேலும், இந்த அரிய காட்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.