• Mar 03 2025

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன்; வீதித் தடை போட்டு மடக்கிப்பிடித்த பொலிஸார்

Chithra / Mar 3rd 2025, 2:08 pm
image


கொழும்பிலிருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரொருவரை இன்று திங்கட்கிழமை (3) காலை கடுகண்ணாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

கொழும்பு - கண்டி வீதியில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இந்த நபரை இடைமறித்துப் பிடிக்க கேகாலை, மாவனெல்ல முதலான பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையாக முயற்சித்தும் அந்த நபரை பிடிக்க முடியாமற்போன நிலையில், 

கடுகண்ணாவை பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை பிடித்து, கைது செய்ததாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கடுகண்ணாவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன்; வீதித் தடை போட்டு மடக்கிப்பிடித்த பொலிஸார் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரொருவரை இன்று திங்கட்கிழமை (3) காலை கடுகண்ணாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு - கண்டி வீதியில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இந்த நபரை இடைமறித்துப் பிடிக்க கேகாலை, மாவனெல்ல முதலான பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையாக முயற்சித்தும் அந்த நபரை பிடிக்க முடியாமற்போன நிலையில், கடுகண்ணாவை பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை பிடித்து, கைது செய்ததாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கடுகண்ணாவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement