தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று(02) மல்லாகத்தில் நடைபெற்றுள்ளது.
மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டுவதன் மூலம் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி சூழல் பாதுகாப்பில் ஈடுபடுத்தும் நோக்குடனும், அவர்களில் பன்முக ஆளுமைகளையும் விருத்தி செய்யும் நோக்குடனும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி என்னும் நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாகவே மல்லாகம் கல்லாரை கிராமத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
வளர்மதி சனசமூக நிலையத்தின் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில், பிரதம விருந்தினராக கனடாவில் இருந்து வருகை தந்திருந்த ஸ்காபுறோ ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஸ்தாபகர் ஞானம்மா திருநாவுக்கரசு அம்மையாரும், சிறப்பு விருந்தினர்களாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், ஆசிரியர் சி. நவநீதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
நூற்றுக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவருக்கும் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட பசுமை அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான நிதி அனுசரணையை ஞானம்மா திருநாவுக்கரசு அம்மையார் கனடா ரொறன்ரோவின் மனித நேயக்குரல் அமைப்பினூடாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மல்லாகத்தில் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று(02) மல்லாகத்தில் நடைபெற்றுள்ளது.மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டுவதன் மூலம் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி சூழல் பாதுகாப்பில் ஈடுபடுத்தும் நோக்குடனும், அவர்களில் பன்முக ஆளுமைகளையும் விருத்தி செய்யும் நோக்குடனும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி என்னும் நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாகவே மல்லாகம் கல்லாரை கிராமத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.வளர்மதி சனசமூக நிலையத்தின் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில், பிரதம விருந்தினராக கனடாவில் இருந்து வருகை தந்திருந்த ஸ்காபுறோ ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஸ்தாபகர் ஞானம்மா திருநாவுக்கரசு அம்மையாரும், சிறப்பு விருந்தினர்களாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், ஆசிரியர் சி. நவநீதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.நூற்றுக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவருக்கும் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட பசுமை அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அனுசரணையை ஞானம்மா திருநாவுக்கரசு அம்மையார் கனடா ரொறன்ரோவின் மனித நேயக்குரல் அமைப்பினூடாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.