• Nov 28 2024

வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் களவு! ஏழு பேர் கைது – 16 பவுண் நகைகளும் மீட்பு

Chithra / Dec 27th 2023, 8:11 am
image

 


வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 பேர் மன்னாரைச் சேர்ந்த 2 பேர் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடந்த 20ம் திகதி வல்வெட்டித்துறையில் நடந்த களவுச் சம்பவத்தில் ஐந்தரை இலட்சம் ரூபாய் பணமும் 16 பவுண் நகைகளும் களவுபோயுள்ளது.

களவில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் 19 வயதான போதைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது.

போதைக்கு அடிமையான திருட்டில் ஈடுபட்ட ஒருவர், நகை அடகு வைத்தவர், நகையை உடமையில் வைத்திருந்தவர்கள் என பெண் உள்ளிட்ட எழு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் களவு ஏழு பேர் கைது – 16 பவுண் நகைகளும் மீட்பு  வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 பேர் மன்னாரைச் சேர்ந்த 2 பேர் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.கடந்த 20ம் திகதி வல்வெட்டித்துறையில் நடந்த களவுச் சம்பவத்தில் ஐந்தரை இலட்சம் ரூபாய் பணமும் 16 பவுண் நகைகளும் களவுபோயுள்ளது.களவில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் 19 வயதான போதைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது.போதைக்கு அடிமையான திருட்டில் ஈடுபட்ட ஒருவர், நகை அடகு வைத்தவர், நகையை உடமையில் வைத்திருந்தவர்கள் என பெண் உள்ளிட்ட எழு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement