• Nov 14 2024

தேர்தல் வெற்றியை விட ஆட்சி முறைமையில் மாற்றம் கொண்டு வருவதே தமது இலக்கு- அனுர தரப்பு சுட்டிக்காட்டு..!

Sharmi / Aug 31st 2024, 12:20 pm
image

தேர்தல் வெற்றியை விடவும் ஆட்சி முறைமையில் மாற்றம் கொண்டு வருவதே தமது இலக்கு என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியை உறுதி செய்ய பல தரப்பினர்  எம்முடன் இணைந்து கொள்கின்றனர். 

நாட்டை பொருளாதாரத்தில் மட்டுமன்றி சட்டம், கலாசாரம் உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் செழிப்படையச் செய்ய வேண்டும்.

இன, மத பேதமற்ற ஓர் நாட்டை உருவாக்க வேண்டியது அவசியமானது.

அதேவேளை, அரசியல்வாதிகளின் அதிகாரத்தை பலப்படுத்த பொலிஸார் பயன்படுத்தப்படுவதாகவும் இந்த முறையில் மாற்றம் செய்யப்படும்.

தேர்தல் வெற்றியை விடவும் ஆட்சி முறைமையில் மாற்றம் கொண்டு வருவதே தமது இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






தேர்தல் வெற்றியை விட ஆட்சி முறைமையில் மாற்றம் கொண்டு வருவதே தமது இலக்கு- அனுர தரப்பு சுட்டிக்காட்டு. தேர்தல் வெற்றியை விடவும் ஆட்சி முறைமையில் மாற்றம் கொண்டு வருவதே தமது இலக்கு என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.காலியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியை உறுதி செய்ய பல தரப்பினர்  எம்முடன் இணைந்து கொள்கின்றனர். நாட்டை பொருளாதாரத்தில் மட்டுமன்றி சட்டம், கலாசாரம் உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் செழிப்படையச் செய்ய வேண்டும்.இன, மத பேதமற்ற ஓர் நாட்டை உருவாக்க வேண்டியது அவசியமானது.அதேவேளை, அரசியல்வாதிகளின் அதிகாரத்தை பலப்படுத்த பொலிஸார் பயன்படுத்தப்படுவதாகவும் இந்த முறையில் மாற்றம் செய்யப்படும்.தேர்தல் வெற்றியை விடவும் ஆட்சி முறைமையில் மாற்றம் கொண்டு வருவதே தமது இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement