• May 20 2024

தனிநபர் வரி வருமானம் பாரியளவில் அதிகரிப்பு! வெளியான அறிக்கை samugammedia

Tax
Chithra / Apr 5th 2023, 9:35 am
image

Advertisement

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனிநபர் முற்பண வருமான வரி தொடர்பான வருமானமாக 25,577 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது.

ஜனவரி மாதத்தில் 3,106 மில்லியன் ரூபாவும் பெப்ரவரியில் 10,540 மில்லியன் ரூபாவும் வசூலித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மார்ச் மாதத்தில் 11,930 மில்லியன் ரூபா வரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் வரி வருமானத்தில் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தனிநபர் வரி வருமானம் பாரியளவில் அதிகரிப்பு வெளியான அறிக்கை samugammedia இந்த வருடத்தின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனிநபர் முற்பண வருமான வரி தொடர்பான வருமானமாக 25,577 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது.ஜனவரி மாதத்தில் 3,106 மில்லியன் ரூபாவும் பெப்ரவரியில் 10,540 மில்லியன் ரூபாவும் வசூலித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், மார்ச் மாதத்தில் 11,930 மில்லியன் ரூபா வரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் வரி வருமானத்தில் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement