• May 03 2024

நாட்டில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு..! மக்கள் மீண்டும் வரிசையில்..! samugammedia

Chithra / Jun 26th 2023, 7:57 pm
image

Advertisement

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.

அத்தோடு நகர மத்தியில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றதுடன் எரிபொருள் பம்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலினை பெற்றுக்கொள்ள மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முற்சக்கரவண்டி சாரதிகள் வரிசையில் காத்து நிற்கின்றதனை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

விநியோகஸ்தர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத இருப்பை வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கையிருப்புகளை பராமரிக்காத எரிபொருள் நிலையங்களின் உரிமத்தை மறுபரிசீலனை செய்து இடைநிறுத்துமாறு இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்திடம்  மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்திருந்த நிலையிலும் வவுனியா மாவட்டத்தில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றன.


நாட்டில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு. மக்கள் மீண்டும் வரிசையில். samugammedia வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.அத்தோடு நகர மத்தியில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றதுடன் எரிபொருள் பம்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலினை பெற்றுக்கொள்ள மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முற்சக்கரவண்டி சாரதிகள் வரிசையில் காத்து நிற்கின்றதனை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.விநியோகஸ்தர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத இருப்பை வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கையிருப்புகளை பராமரிக்காத எரிபொருள் நிலையங்களின் உரிமத்தை மறுபரிசீலனை செய்து இடைநிறுத்துமாறு இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்திடம்  மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்திருந்த நிலையிலும் வவுனியா மாவட்டத்தில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement