• Nov 12 2024

தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே தளம்பல் நிலை...! ஈ.பி.டி.பி சுட்டிக்காட்டு...!

Sharmi / Jun 4th 2024, 4:18 pm
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதாக  ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றையதினம்(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சிக்குள் உட்பூசல் உச்சமடைந்திருந்த சமயத்தில் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழரசுக் கட்சி தங்களுக்குள் உள்ள தலைமைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்த பின் தங்களிடம் பேச வரட்டும் என ஏளனமாக கூறிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தற்போது தமிழரசுக் கட்சி சரியான முடிவை மிக விரைவாக எடுத்து எல்லோருடனும் இணைந்து பயணிப்பதானது தேவையான விடயம் என இரந்து நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.

ஆயினும் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்  வந்தபின்னர் தமது முடிவை எடுக்கவுள்ளதாக கூறிவருகின்றது.

அதேவேளை பொது வேட்பாளர் என்பது ஒரு விஷப் பரீட்சை என அக்கட்சி தெரிவித்துள்ளது.

அதேபோன்று எதிர்வரும் 9 ஆம் திகதி பொது வெளியில் இது தொடர்பாக விவாதிப்பதற்கு அறிவித்தல் ஒன்றையும் விடுத்துள்ளது.

அதில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பதை தெரிந்துகொண்ட சுரேஸ் அணியினர் மிகமிக விரைவாக முடிவெடுக்குமாறு கோரியுள்ளனர்.

ஏனெனில் ஜே.வி.பினர் இப் பொதுவேட்பாளர் தொடர்பான தரப்பினரை எதிர்வரும் வாரம் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

இச்சந்திப்பினபோது ஜே.வி.பியினருடன் பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டால் தத்தமது நலன்களுக்காக முகவர்களுக்கு பின்னால் இருந்து இயங்கும் இவர்கள் பொது வேட்பாளர் விடயம் கைவிட்டுவிடுவார்களா என்றும் அதன்பின்னர் மக்களுக்கு எதை கூறி மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்கள் என்றும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே தளம்பல் நிலை. ஈ.பி.டி.பி சுட்டிக்காட்டு. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதாக  ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழில் இன்றையதினம்(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழரசுக் கட்சிக்குள் உட்பூசல் உச்சமடைந்திருந்த சமயத்தில் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழரசுக் கட்சி தங்களுக்குள் உள்ள தலைமைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்த பின் தங்களிடம் பேச வரட்டும் என ஏளனமாக கூறிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தற்போது தமிழரசுக் கட்சி சரியான முடிவை மிக விரைவாக எடுத்து எல்லோருடனும் இணைந்து பயணிப்பதானது தேவையான விடயம் என இரந்து நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.ஆயினும் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்  வந்தபின்னர் தமது முடிவை எடுக்கவுள்ளதாக கூறிவருகின்றது. அதேவேளை பொது வேட்பாளர் என்பது ஒரு விஷப் பரீட்சை என அக்கட்சி தெரிவித்துள்ளது.அதேபோன்று எதிர்வரும் 9 ஆம் திகதி பொது வெளியில் இது தொடர்பாக விவாதிப்பதற்கு அறிவித்தல் ஒன்றையும் விடுத்துள்ளது. அதில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பதை தெரிந்துகொண்ட சுரேஸ் அணியினர் மிகமிக விரைவாக முடிவெடுக்குமாறு கோரியுள்ளனர்.ஏனெனில் ஜே.வி.பினர் இப் பொதுவேட்பாளர் தொடர்பான தரப்பினரை எதிர்வரும் வாரம் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இச்சந்திப்பினபோது ஜே.வி.பியினருடன் பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டால் தத்தமது நலன்களுக்காக முகவர்களுக்கு பின்னால் இருந்து இயங்கும் இவர்கள் பொது வேட்பாளர் விடயம் கைவிட்டுவிடுவார்களா என்றும் அதன்பின்னர் மக்களுக்கு எதை கூறி மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்கள் என்றும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement