• Nov 26 2024

முல்லைத்தீவில் பரபரப்பு...! திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினர்...! வெளியான காரணம்...!samugammedia

Sharmi / Jan 3rd 2024, 10:56 am
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய்பரவலை தடுக்க துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் இன்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையினருடன் இணைந்து பிரதேசசபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள் ,இராணுவம், பொலிஸார் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை இன்று(03) காலை தொடக்கம் மேற்கொண்டு வருகின்றார்கள். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய் சடுதியாக அதிகரித்திருப்பதனால் நீர் தேங்கி நுளம்பு குடம்பிகள் பரவக்கூடிய சிறிய பாத்திரங்கள் , பிளாஸ்டிக் பொருட்கள், ஏனைய நீர் தேங்கி நிற்ககூடிய பாெருட்களை அகற்றுமாறும், டெங்கு அபாய நிலையினை கருத்திற் காெண்டு சசுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் மீறப்படும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


முல்லைத்தீவில் பரபரப்பு. திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினர். வெளியான காரணம்.samugammedia முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய்பரவலை தடுக்க துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் இன்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது.முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையினருடன் இணைந்து பிரதேசசபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள் ,இராணுவம், பொலிஸார் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை இன்று(03) காலை தொடக்கம் மேற்கொண்டு வருகின்றார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய் சடுதியாக அதிகரித்திருப்பதனால் நீர் தேங்கி நுளம்பு குடம்பிகள் பரவக்கூடிய சிறிய பாத்திரங்கள் , பிளாஸ்டிக் பொருட்கள், ஏனைய நீர் தேங்கி நிற்ககூடிய பாெருட்களை அகற்றுமாறும், டெங்கு அபாய நிலையினை கருத்திற் காெண்டு சசுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் மீறப்படும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement