• Sep 21 2024

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி இல்லை; தேர்தல் அவசியமா? – அமைச்சர் கேள்வி!

Chithra / Jan 30th 2023, 2:22 pm
image

Advertisement

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு குறைந்தபட்சம் 10 கோடி ரூபா நிதி  தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

ஒருமாத்திற்கான அரச செலவுக்கு நிதி திரட்டுவது சிக்கலாக உள்ள நிலையில் தேர்தலை நடத்த வேண்டுமாயின் நிதியினை அச்சிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாணயத்தை மீண்டும் அச்சிட்டால் தீவிரமடையும் பொருளாதார பாதிப்புக்கு யார் பொறுப்பு கூறுவது என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ள போதும் நாட்டு மக்கள் தேர்தலுக்கு தயார் இல்லை என தெரிவித்த அமைச்சர், நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதாரத்தின் விளைவு மேலும் தீவிரமடையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவதாகவும் அரசியலமைப்புக்கு அமைய உரிய காலத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி இல்லை; தேர்தல் அவசியமா – அமைச்சர் கேள்வி உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு குறைந்தபட்சம் 10 கோடி ரூபா நிதி  தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.ஒருமாத்திற்கான அரச செலவுக்கு நிதி திரட்டுவது சிக்கலாக உள்ள நிலையில் தேர்தலை நடத்த வேண்டுமாயின் நிதியினை அச்சிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாணயத்தை மீண்டும் அச்சிட்டால் தீவிரமடையும் பொருளாதார பாதிப்புக்கு யார் பொறுப்பு கூறுவது என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ள போதும் நாட்டு மக்கள் தேர்தலுக்கு தயார் இல்லை என தெரிவித்த அமைச்சர், நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதாரத்தின் விளைவு மேலும் தீவிரமடையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டில் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவதாகவும் அரசியலமைப்புக்கு அமைய உரிய காலத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement