• May 19 2024

நீர்தாரை பிரயோகத்தால் பார்வை இழந்த உறவு - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Sharmi / Jan 30th 2023, 2:19 pm
image

Advertisement

அகிம்சை வழியில் போராடிய தமிழ் மக்களுக்கு எதிராக ரணில் தலைமையிலான அரசாங்கம் பாரிய அடக்குமுறையினை முன்னெடுத்திருந்தாகவும் அதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் சிவானந்தன் ஜெனிதா தெரிவித்துள்ளார்.

தேசிய தைப்பொங்கல் விழாவிற்கு ஜனாதிபதி யாழிற்கு விஜயம் செய்த வேளை தேசிய தைப்பொங்கல் விழாவிற்கு எதிராக பேரணியை முன்னெடுத்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் கடந்த ஜனவரி 18ம் திகதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நாளைய தினம் வேலன் சுவாமிகளை மீண்டும் நீதிமன்றில் முன்நிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில்  இன்றைய தினம் வேலன் சுவாமி மற்றும் சட்டத்தரணி தவராசாவும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், யாழ் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சிவானந்தன் ஜெனிதா இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அன்றைய அடக்குமுறையின் போது நீர்தாரை பிரயோகம் ஏற்பட்டத்தால் தனது கண் பார்வையினை இழந்து இருப்பதாகவும் அதற்கான மருந்து ஆவணங்கள் தன்னிடமுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக வழியில் போராடுபவர்களை அச்சுறுத்தும் நோக்கில் காவல்துறையினர் தமக்கு எதிராக வழக்கு தாக்கல்களை செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நீர்தாரை பிரயோகத்தால் பார்வை இழந்த உறவு - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு அகிம்சை வழியில் போராடிய தமிழ் மக்களுக்கு எதிராக ரணில் தலைமையிலான அரசாங்கம் பாரிய அடக்குமுறையினை முன்னெடுத்திருந்தாகவும் அதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் சிவானந்தன் ஜெனிதா தெரிவித்துள்ளார்.தேசிய தைப்பொங்கல் விழாவிற்கு ஜனாதிபதி யாழிற்கு விஜயம் செய்த வேளை தேசிய தைப்பொங்கல் விழாவிற்கு எதிராக பேரணியை முன்னெடுத்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் கடந்த ஜனவரி 18ம் திகதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.இந்நிலையில் நாளைய தினம் வேலன் சுவாமிகளை மீண்டும் நீதிமன்றில் முன்நிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில்  இன்றைய தினம் வேலன் சுவாமி மற்றும் சட்டத்தரணி தவராசாவும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், யாழ் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்தனர்.இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சிவானந்தன் ஜெனிதா இவ்வாறு தெரிவித்திருந்தார்.அன்றைய அடக்குமுறையின் போது நீர்தாரை பிரயோகம் ஏற்பட்டத்தால் தனது கண் பார்வையினை இழந்து இருப்பதாகவும் அதற்கான மருந்து ஆவணங்கள் தன்னிடமுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனநாயக வழியில் போராடுபவர்களை அச்சுறுத்தும் நோக்கில் காவல்துறையினர் தமக்கு எதிராக வழக்கு தாக்கல்களை செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement