• May 03 2024

அமைச்சில் தேனீரை வழங்கவே பணமில்லை.. தேர்தல் முக்கியமா..? புலம்பும் டயானா

Chithra / Jan 19th 2023, 4:37 pm
image

Advertisement

சுற்றுலாத்துறை அமைச்சில் தேனீரை வழங்கவும் பணம் இல்லை என சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சில் தேனீர் வழங்க தேயிலையை கொள்வனவு செய்யவும் எனக்கு வழியில்லை. அமைச்சின் செலவுகளுக்கு பணமில்லை.

இப்படியான நிலைமை நிலவும் நாட்டில் எப்படி 10 மில்லியன் ரூபா செலவில் தேர்தலை நடத்துவது. 10 பில்லியன் ரூபா செலவில் இது முடிந்து விடாது.

வாக்குச்சீட்டுக்களுக்கான காகிதங்களையும் மை போன்றவற்றையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அவை இதுவரை கொள்வனவு செய்யப்படவில்லை.

நாட்டில் எங்கே பணம் இருக்கின்றது. இதனால், கேலியை நிறுத்துங்கள். நாட்டின் தற்போதைய நிலைமையில் தேர்தல் அவசியமில்லை.

நாட்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவோம். அதன் பின்னர் தேர்தலுக்கு செல்வோம். இதன் பின்னர் அடுத்தடுத்து தேர்தல்களை நடத்துவோம் எனவும் டயனா கமகே மேலும் தெரிவித்துள்ளார். 

அமைச்சில் தேனீரை வழங்கவே பணமில்லை. தேர்தல் முக்கியமா. புலம்பும் டயானா சுற்றுலாத்துறை அமைச்சில் தேனீரை வழங்கவும் பணம் இல்லை என சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.சுற்றுலாத்துறை அமைச்சில் தேனீர் வழங்க தேயிலையை கொள்வனவு செய்யவும் எனக்கு வழியில்லை. அமைச்சின் செலவுகளுக்கு பணமில்லை.இப்படியான நிலைமை நிலவும் நாட்டில் எப்படி 10 மில்லியன் ரூபா செலவில் தேர்தலை நடத்துவது. 10 பில்லியன் ரூபா செலவில் இது முடிந்து விடாது.வாக்குச்சீட்டுக்களுக்கான காகிதங்களையும் மை போன்றவற்றையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அவை இதுவரை கொள்வனவு செய்யப்படவில்லை.நாட்டில் எங்கே பணம் இருக்கின்றது. இதனால், கேலியை நிறுத்துங்கள். நாட்டின் தற்போதைய நிலைமையில் தேர்தல் அவசியமில்லை.நாட்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவோம். அதன் பின்னர் தேர்தலுக்கு செல்வோம். இதன் பின்னர் அடுத்தடுத்து தேர்தல்களை நடத்துவோம் எனவும் டயனா கமகே மேலும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement