சஜித் பிரேமதாச மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைவதற்கு எவ்வித தடையுமில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல், கட்டுகம்பொல தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவின் மகனுமான அசங்க பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியில் நேற்று மீண்டும் இணைந்துகொண்டார்.
இதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாலித ரங்கே பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல், கட்டுகம்பொல தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவின் மகனுமான அசங்க பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியில் நேற்று மீண்டும் இணைந்துகொண்டார்.
இதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாலித ரங்கே பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியில் வளர்ந்த பிள்ளை. அவர் எந்நேரத்தில் வேண்டுமானாலும் தாய் வீட்டுக்குத் திரும்பலாம்.
'ஐக்கிய மக்கள் சக்தி என்பது தற்போது இராணுவ முகாமாக மாறிவருகின்றது. ஓய்வுபெற்ற இராணுவத்தினர் அந்தக் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
இதனால் சஜித்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது கூட ஒன்றும் தாமதமாகவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் தாய்வீடு திரும்பலாம். சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியில் வளர்ந்தவர்.
அவரும் எந்நேரத்திலும் வரலாம். அதே வேளை, உரியகாலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அதில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார். சஜித்தோ, அநுரவோ எமக்கு சவால் இல்லை எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கு சஜித்திற்கு எவ்வித தடையுமில்லை. விடுக்கப்பட்ட அழைப்பு. சஜித் பிரேமதாச மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைவதற்கு எவ்வித தடையுமில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல், கட்டுகம்பொல தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவின் மகனுமான அசங்க பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியில் நேற்று மீண்டும் இணைந்துகொண்டார். இதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாலித ரங்கே பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல், கட்டுகம்பொல தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவின் மகனுமான அசங்க பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியில் நேற்று மீண்டும் இணைந்துகொண்டார். இதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாலித ரங்கே பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியில் வளர்ந்த பிள்ளை. அவர் எந்நேரத்தில் வேண்டுமானாலும் தாய் வீட்டுக்குத் திரும்பலாம்.'ஐக்கிய மக்கள் சக்தி என்பது தற்போது இராணுவ முகாமாக மாறிவருகின்றது. ஓய்வுபெற்ற இராணுவத்தினர் அந்தக் கட்சியில் இணைந்து வருகின்றனர். இதனால் சஜித்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது கூட ஒன்றும் தாமதமாகவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் தாய்வீடு திரும்பலாம். சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியில் வளர்ந்தவர். அவரும் எந்நேரத்திலும் வரலாம். அதே வேளை, உரியகாலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அதில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார். சஜித்தோ, அநுரவோ எமக்கு சவால் இல்லை எனவும் தெரிவித்தார்.