• Nov 21 2024

ஜே.வி.பிக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கிய இந்தியா..! பிக்கு குற்றச்சாட்டு

Chithra / Feb 14th 2024, 10:10 am
image

 

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியா விஜயம் செய்திருந்த போது 300 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டதா என மிஹிந்தலை ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி கலாநிதி வலஹங்குவே தம்மரதன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

300 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பணம் ஜே.வி.பிக்கு கிடைத்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

89-90ம் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து மருந்து மாத்திரை கூட கொண்டுவரக் கூடாது என ஜே.வி.பி.  எதிர்ப்பு நிலைப்பாட்டை பின்பற்றியது.

துறைமுகம், விமான நிலையம், வங்கிகள், மின்சாரசபை, காப்புறுதி நிறுவனங்கள், வங்கிகள் என அனைத்தையும் இந்தியாவிற்கு வழங்க தீர்மானிக்பபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உள்நாட்டு சொத்துக்கள் விற்பனை செய்வதனை எதிர்த்த ஜே.வி.பி. தற்பொழுது விலை மனுக் கோரி விற்பனை செய்யுமாறு கூறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தரகுப் பணத்திற்காக ஜே.வி.பி இவ்வாறு செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜே.வி.பிக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கிய இந்தியா. பிக்கு குற்றச்சாட்டு  ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியா விஜயம் செய்திருந்த போது 300 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டதா என மிஹிந்தலை ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி கலாநிதி வலஹங்குவே தம்மரதன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.கண்டியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.300 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பணம் ஜே.வி.பிக்கு கிடைத்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.89-90ம் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து மருந்து மாத்திரை கூட கொண்டுவரக் கூடாது என ஜே.வி.பி.  எதிர்ப்பு நிலைப்பாட்டை பின்பற்றியது.துறைமுகம், விமான நிலையம், வங்கிகள், மின்சாரசபை, காப்புறுதி நிறுவனங்கள், வங்கிகள் என அனைத்தையும் இந்தியாவிற்கு வழங்க தீர்மானிக்பபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.முன்னதாக உள்நாட்டு சொத்துக்கள் விற்பனை செய்வதனை எதிர்த்த ஜே.வி.பி. தற்பொழுது விலை மனுக் கோரி விற்பனை செய்யுமாறு கூறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தரகுப் பணத்திற்காக ஜே.வி.பி இவ்வாறு செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement